பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

51

தைக் கொண்டு வாழ்கிறான். கிடைத்ததை மன நிறைவோடு நுகர்ந்து இன்பமடைகிறான். அது பணம் படைத்த செல்வர்களுக்குகூடக் கிடைப்பதில்லை.

எனவே, செல்வர் பணத்தைக் கண்டோ, ஏழை தன் வறுமையைக் கண்டோ மனச் சோர்வு அடையத் தேவை இல்லை. அது மட்டுமில்லை; இயற்கை இருவருக்குமே மகிழ்ச்சியைப் பகிர்ந்து அளிக்கின்றது.

மேலும்-கீழும்

மனிதா பிறரிடம் இருந்து வேலை செய்ய வேண்டி இருக்கிறதே என்று கவலைப்படாதே. அதுதான் இன்றைய சமூகத்தில் உனக்கு அளித்துள்ள இடம். அதில் பல நன்மைகள் உனக்கு உண்டு. உனக்கு வாழ்க்கையில் தேவைகள் குறைந்துவிட்டன. பல கவலைகள் உனக்கு இல்லை.

நல்ல வேலைக்காரனாக இருந்து பணிந்து போவதால் மேலிடத்துக் கட்டளைகளுக்குக் கீழ்ப் படிந்து நடப்பதால் நீ ஒழுக்கமுள்ளவனாக மாறி விடுகிறாய். மேலதிகாரி உன்னைக் கடிந்து கொள்ளும்போது வாய் திறந்து எதையுமே பேசாதே. நீ எதிர்த்துப் பேசாதிருப்பதன் மூலம் உனக்குப் பல நன்மைகள் ஏற்படும். உரிமைக்கு மானக் கேடற்றுப் பழகு.