பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/56

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

55

கிறது. எனவே நீ அதை எல்லாம் சமுதாயத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

மக்களின் நண்பனாக இருக்க வேண்டியது. உன் கடமை. எல்லோரும் உன்னிடம் தோழமையின் நட்புறவு கொள்ளவேண்டும்.

முல்லை மலரில் இருந்து எப்படி நறுமணம் வெளிப்படுகிறதோ, அதைப் போன்று இரக்கமுள்ளவனிடமிருந்து நல்லவை வெளிப்படுகின்றன. அவன் தன் மனத்திற்கு இந்த வகையில் அமைதியைத் தேடிக் கொள்கிறான். அவன் அருகில் உள்ளவர்களின் மகிழ்ச்சியிலும், முன்னேற்றத்திலும் ஆர்வம் கொள்கிறான். தூற்றுபவர்களை அவன் பொருட்படுத்தமாட்டான். மனிதர்கள் தவறு செய்யும்போது, அவன் மனம் அல்லல்படும் சமயம் வாய்க்கும்போதெல்லாம் தான் நல்லதையே, செய்திடுவான். பிறருக்குக் கேடு வரும்போது அதைப் போக்கி ஆறுதல் புரிவான்.

அவன் எப்போதும் பெரிய நோக்கம் கொண்டு மக்கள் இன்புற்று வாழ வழி செய்திடுவான்.

முறைமை

சமூகத்தின் அமைதி நிலவிடும் நிலைமையை அடிப்படையாகக் கொண்டது மு றை மை. ஒவ்வொரு குடிமகனுக்கு அவனுடைய பொருள்களுக்கு உரிய பாதுகாப்பு இருக்க வேண்டும். எனவே, உன் ஆசைகள் வரம்புக்குட்பட்டு-