பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/71

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

சிறந்த வாழ்வுக்குச் சில சிந்தனைகள்


நினக்கு அமைந்த நிலையைப் புரிந்து கொண்டு வாழ வேண்டும். இன்பத்திற்கும் துன்பத்திற்கும் ஈடு கொடுத்து வாழ்ந்திடு.

எளிய படுக்கையில் உறங்குவது நல்லது. மலர்ப்படுக்கையில் உறங்குவது நல்லது. மலர் படுக்கையில் உறங்கும்போது, அந்தப் படுக்கையில் முட்கள் இருப்பதைக் கவனத்தில் கொண்டிரு.

செல்வனாக வாழ்வதைவிட, எளிய நல்வாழ்வு வாழ்வது மேலானது. நேரமில்லையே என்று கவலைப்படாதே. நின் காலமே குறுகிக்கொண்டு வருவதை நினைத்திடு.

வாழும் காலத்தில், குழந்தைப் பருவம், முதிய பருவம், உறக்கம் பிணியால் அவதியுறும் காலம், ஏதும் சிந்திக்காது சோம்பிச் செலவிடும் காலம், ஆக இதை எல்லாம் கணக்கிட்டால் நீ வாழும் காலம் மிக மிகக் குறைவு என்பதை மறந்துவிடாதே. நின்னைப் படைத்த இயற்கைதான் நீ வாழும் நாள்களைக் குறைத்து வருகிறது. அதிக நாள் வாழ்வது நினக்கு என்ன சிறப்பு? எனவே, தீமையை விட்டு விலகிச் சீராக வாழ முற்படு.

ஓர் அலைக்குப் பின் தொடர்ந்து மற்றோர் அலை வருவது போல உள்ளம் உரை செயல் கெட்டால் கேடுகள் தொடர்ந்தே வரும்.

சாவைக் கண்டால் முட்டாள் பயப்படுவான். தான் இறக்கப் போவதில்லை என்று ஆசைகளை அதிகமாக்கிக் கொள்வான்.