பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/74

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

73


எதையும் தெளிவாக அறிந்து கொள்ளாத நிலையில்தான் நீ பிறந்தாய். மாற்றங்களுடன் கூடியதே. உன் வாழ்க்கை. அதனால்தான் நீ உறுதியாக இருப்பதற்கு இல்லை. உனைப் பெற்றவர்கள் உனக்கு உடலைத்தான் தந்தார்கள். உலகுதான் உனக்கு மன உறுதியைத் தந்தது. இதை உணர்ந்து நீ அறிவாளியாக வேண்டும். அப்போதுதான் நீ வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

பெருமைக்குரிய அருஞ்செயல் புரிந்துவிட்டுப் பெருமையடைபவர்கள், அது தன் திறமையால் தான் என்று கருதாதே. உனக்கும் புலப்படாத நிலையில் சமூகச் சூழலின் அருள்தான் சிறப்புக் காரணம் என்பதைத் தெரிந்து கொள். எதிர்பாராத நிலையில் உனக்கு அருள் புரிந்த இயற்கையைசமூகத்தைப் போற்று. தயக்க நிலையிலேதான் உன் செயல்களை நீ மேற்கொண்டாய் என்பதை மறந்து விடாதே.

சிந்திக்கும் திறனைக் குறை கடறாதே. மாறு பட்டு நீ நடப்பதற்கு எது காரணம்? நீ உறுதியான எண்ணத்தை ஏற்படுத்திக் கொள்ளாதது யார் குற்றம்?

சிந்திக்கும் மனிதன் மாறுபடுகிறான். தீய முறையில் நீ நடப்பதும், அடிக்கடி மாறுபட்ட நிலையினை அடைவதும் மறையவேண்டுமானால்

சி - 5