பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/76

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

75


எனவே, துன்பமும் இன்பமும் நிலையற்றவை மாறக்கூடியவை.

பொறுமையாக, உறுதியாக, அமைதியாக உன் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். தடைகளைக் கண்டு தளர்ந்துவிடக் கூடாது. உன் பாதையில் மலையே குறுக்கிட்டாலும் மறைந்து விடும். கடல் குறுக்கே வந்தாலும் வற்றிவிடும். புலியே வந்தாலும் வேறு திசையில் புகுந்துவிடும். எங்கும் நீ அச்சமின்றி நடமாடலாம். சாவையும் உன் கையினால் ஒதுக்கலாம், புயல் வீசிடினும் உனக்குக் கவலை இல்லை. இடியும் உன் தலையில் விழாது. மின்னலும் தன் அழகைத்தான் காட்டமுடியும்.

இதற்குப் பெயர்தான் உறுதி. அந்த உறுதி மனப்பான்மை எங்கிருந்தோ (உள்ளிருந்து) உனக்கு ஏற்படும். அந்த உறுதி மகிழ்ச்சி தரும். அது கோள்களுக்கு அப்பாலுள்ள குறிக்கோளில் குடி கொள்ளும், உன்னை ஊக்குவிக்கும். அது நின்னிடம் நிலையாக இருக்கும். அந்த நிலையை அடைந்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்திடு.

பலவீனம்

வீணாக அடிக்கடி மாற்றம் கொள்பவனுக்குப் பலவீனம் குறையாகவே இருக்கும். நிலையாக இருக்க நீ முடியாததற்கு இந்தப் பலவீனமே