பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/82

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

81

துன்பம்

அன்ப, நீ முழுவதும் நல்லதைக் கொண்டவன் அல்லன். நின்னிடமும் குறைகள் உண்டு. நீ மகிழ்ச்சியுடன் உறுதியாக இருக்கலாம். உனக்கும் துன்பம் நேரும். அது இயற்கை. துன்பம் எப்படி நேரிருகிறது? எல்லாம் உன் உணர்வின் விளைவாகத்தான் ஏற்படுகிறது என்பதைப் புரிந்து கொள்.

நீ துயரச் சூழலில் பிறவி எடுக்கவில்லை. உன் அழிவிலும் ஒரு சிறப்பு இருக்கிறது. இந்த உலகத்தில் நல்லதற்கு உரிய மதிப்பில்லை. உன்னைப் பெற்றவனே கூட வெட்கப்பட வேண்டிய நிலை ஏற்படலாம். ஆயிரம் உயிர்களை அழித்தவனையும் பாராட்டும் மக்கள் இருக் இருக்கிறார்கள். வெட்கப்பட வேண்டியவர்கள் வெட்கப்படுவதில்லை. பாராட்டப்பட வேண்டியவர்கள் பாராட்டுப் பெறுவதில்லை.

பிறப்பது ஒரே வழியில்தான் அனைவரும். அழிவதிலேயே ஆயிரம் வழிகள் உள்ளன.

பிறருக்குக் கொடுத்து உதவி செய்பவனை மதிப்பார் இல்லை. பல கொலைகளுக்குக் காரணமாக இருப்பவனுக்கு வெற்றிகளும் விருதுகளும் பரிசாகக் கிடைக்கின்றன.

பெற்ற மழலைகள் மூலம் பல நன்மைகளை அடைபவர்களும் உண்டு. பிறந்தவர்களை மடியச் செய்பவன் எதையும் நுகர்வதில்லை.