பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/84

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

83

விடுகிறான். தனக்கு வலி ஏற்படும்போது வருத்தப்படுகிறான். பிறருக்கு வலியை உண்டாக்கும்போது சிந்திக்க மறுக்கிறான். தீதும் நன்றும் பிறர்தர வாரா.

தீர்ப்பு

எதையும் சீர் தூக்கிப் பார்த்து முடிவுகளை மேற்கொள்ள மனிதன் ஆற்றல் படைத்தவன். அந்த ஆற்றலைத் தவறான செயல்களுக்குப் பயன்படுத்தாதவன் மகிழ்ச்சியடைகிறான்.

கொட்டும் புயல் மழையில் மலை மீதுள்ள செல்வம் அழிக்கப்படுவதைப் போல், பொது மக்கள் தீர்ப்பு ஞாயத்தையும், அறமுறையையும் அழித்து விடுகிறது. உண்மையை முழுமையாகப் பெற முனைய வேண்டும். உண்மையின் சாயலைக் கண்டு முடிவுகளை மேற்கொள்ளக் கட்டாது. அதனால் தவறான தீர்ப்பு கடறவேண்டிய நிலை ஏற்படலாம்.

உன்னுடைய தீர்ப்புக்கு மாறுபட்ட கருத்தைக் கூறுபவர்களைக் குறை கூறக் கூடாது. இரண்டு முடிவுகளுமேகூடத் தவறானதாக இருக்கலாம். பட்டங்களைப் பெற்றிருப்பதால் மட்டுமே அவன் கடறும் தீர்ப்பு சரியானது என்று மதிப்பிட முடியாது. எதிரியைப் பழிவாங்கும் எண்ணத்துடன் சமயத்தைப் பயன்படுத்திக் கொண்டு எதிரியைக் கொன்று விடாதே.