பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/88

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

87

வையகத்தையும், இன்பத்தையும் தனக்காகவே இயற்கை படைத்திருப்பதாக மனிதன் நினைக்கிறான். அனைத்தும் தான் சுவைத்து மகிழ்வதற்காகவே படைக்கப்பட்டதாக நினைக்கிறான். அப்படி நினைப்பது தவறு; முட்டாள்தனம். கோடான கோடி மக்களைப் படைத்த இயற்கை அனைத்தையும் அனைவருக்காகவே படைத்திருக்கிறது.

உன் நலனுக்காக நீ மற்றவர்களைத் துன்புறுத்துவது கூடாது என்பதைப் புரிந்துகொள். நிலவுலகைப் படைத்த இயற்கை எல்லோருக்கும் வாழ்க்கை நெறிகளையுண்டாக்கி இருக்கிறது. எல்லோரையும் காக்கும் பொறுப்பு அதனுடையது. அதில் குறுக்கிடாதே. இயற்கை விதிகளை மீறி நடக்காதே.

எந்த ஒர் உண்மையும் ஒரே வடிவத்தில் புரிந்து கொள்ளக் கூடியது இல்லை. அதனால் எதையும், ஊகித்து ஒரு முடிவுக்கு வந்து விடாதே.

மனிதன் பற்று

செல்வத்திற்குத் தனி மதிப்புக் கொடுத்து, தனக்கு மட்டும் செல்வம் வேண்டும் என்று மனிதன் நினைப்பது அறத்துக்குப் புறம்பானது. எல்லாரும் எல்லாம் பெறவேண்டும். இல்லாமை ஒழியவேண்டும். இன்ப வாழ்வு பொது.