பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/89

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

சிறந்த வாழ்வுக்குச் சில சிந்தனைகள்

அளவுக்கு மீறி அதிகமாகச் செல்வத்தை அடைய வேண்டும் என்று ஆசைப்படுவது நஞ்சை நாடுவதாகும். அது எல்லாவற்றையும் அழித்துவிடும். அந்த ஆசை ஏற்பட்டால் நல்லொழுக்கம், நேர்மை, பற்று, அன்பு எல்லாம் போய்விடும்.

பணத்திற்காகச் சிலர் தங்களையே விற்பார்கள். இன்பத்தைக் கொடுத்துத் துன்பத்தைப் பெற்றுக் கொள்வார்கள். தங்க நகைகளுக்காக ஆசைப்பட்டுத் தன் வீட்டை விற்பவன், தன் அமைதியைக் கொடுத்து விட்டுக் கவலைகளைத் தேடிக் கொண்டவன் ஆவான்.

செல்வத்தைவிடச் சிறந்தது நல்லொழுக்கம்; மனிதன் தனக்கு எவ்வளவு தேவையோ அந்த அளவிற்கே ஆசைப்பட வேண்டும். அதுவே, நிறைவான நல்வாழ்வு. அதிகமாகப் பணம் சேர்ந் தவன் துன்பமடைவதைக் கண்டு அறிவு பெற்றிடு. பேராசை வீட்டையும் நாட்டையும் கெடுக்கும் நஞ்சு.

தங்கம் விரும்பத்தக்கதில்லை என்பதால் மண்ணுக்குள் அடியில் மறைக்கப்பட்டிருக்கிறது. வெள்ளி இருக்குமிடம் தெரியாமல் காலால் மிதித்து செய்கிறாய். இதிலிருந்து நீ கவர்ச்சியானவை மீது பற்றார்வம் கொள்ளக் கூடாது என்பதைப் புரிந்துகொள்.

நிலத்தின் மேல் பல நல்லவை இருக்கின்றன. உனக்குச் செல்வமாகத் தோன்றுவது மண்ணின்