பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/99

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

சிறந்த வாழ்வுக்குச் சில சிந்தனைகள்


நாட்டுக்காக உழைத்த உயர்தவனுக்குப் பட்டம் பதவிகள் கிட்டும். அப்படிப்பட்டவர்களால் உலகமே நன்மை அடையும்-பெற்றோர்களின் நற்குணங்களைப் பிள்ளைகளும் அடைவார்கள். அவர்களும் மதிப்பும் மரியாதையும் அடைவார்கள். வழி வழியாக நல்ல ஒழுக்க வாணர்களாக, உயர்ந்தவர்களாக மதிப்பும் மரியாதையும் அடைய முயலவேண்டும்.

தகுதி இல்லாதவன் தன்றன் முன்னோர்களின் சிறப்பு இடத்தை அடைய நினைப்பது கள்ளத் தனமாகும்.

குருடனுக்குத் தன் பெற்றார்களைப்போலப் பார்க்க முடியவில்லையே என்று ஏங்கி என்ன பயன்? ஊமை தன்றன் மூத்தவர்களைப்போல உரையாட முடியவில்லையே என்று வருந்தி என்ன பயன்? தாழ்ந்து தரக்குறைவான நிலை அடைந்த வர்களுக்கு முன்னோர் சிறப்பு விளங்காது.

ஒழுக்கத்தை இழந்தவன் இகழப்படுவான். அவன் எந்தப் பட்டமும், பதவியும் பெற்று உயர முடியாது. உயர்ந்தாலும் நிலைக்காது. கால வெள்ளம் அடித்துச் சென்றுவிடும்.

உருவத்திற்கும் நிழலுக்கும் உள்ள தொடர்பு போல மதிப்பும் மரியாதையும் நல்லனவற்றுடன் தொடர்பு கொண்டுள்ளன. மதிப்பும் மரியாதையும் நாட்டை நடத்த எல்லோருக்கும் தேவை இல்லை. எனவே, உனக்கு எந்த பொறுப்பு கிடைக்கிறதோ