பக்கம்:சிறுகதைகள், அண்ணாதுரை.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காமக்குரங்கு

21

“அதுதான் வேடிக்கை. அவனுடைய மனைவி இருக்கிறாளே, பாவம், நல்ல வயது, குணமும் அழகும் பொருந்திய பெண், அவள் படுக்கை அறைக்குப் போனேன் தற்செயலாக.”

“அடப்பாவி! பிறகு?”

“பிறகு என்ன? அந்தப் பாதுகாப்பு அறைக்குள் அவன் எப்படி வருவான்? விடியும்வரை அவளோடு தங்கி இருந்துவிட்டு வந்தேன்.”

“அவள் உன்னை ஒன்றும் கேட்கவில்லையா?”

“ஒன்றா? ஒன்பதாயிரம் கேட்டாள். நானும் உன் புருஷன் யோக்யதையைப் பாரடி என்று சொல்லிவிட்டுத் தான் வந்தேன். அக்கா! காசுக்காக வாழும் எனக்கே அவன் பீடையாகத் தெரிகிறானே, பாவம் அந்தப் பெண் பத்தரை மாற்றுத் தங்கப் பதுமைபோல் இருக்கிறாள், கள்ளமற்ற சுபாவக்காரி, கலகலவெனச் சிரித்துப் பேசுகிறாள், அவளுக்கு எப்படித்தான் மனம் சம்மதிக்கும் இந்தக் கிழக்குரங்குடன் வாழ?”

“அந்த வேதாந்தத்தையும் அவளுக்குப் போதித்துவிட்டு வருவதுதானே, வீண் வேலைக்குத்தான் நீ முதல் தாம்பூலம் வாங்குபவளாச்சே.”

மலர்க்கொடி மற்றோர் ஆடலழகியுடன், மிட்டாதாரரின் காமவெறி பற்றியும் தன்நிலை பற்றியும் பேசிக்கொண்டிருப்பாள், இருவரும் சேர்ந்து சிரிப்பார்கள், என்று மதுரவல்லி நினைத்தாள். நினைத்ததும் அந்தக் காட்சியே