பக்கம்:சிறுகதைகள், அண்ணாதுரை.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காமக்குரங்கு

23

“நேற்று இரவு நடந்த விஷயத்தை யாரிடமும் கூறாதே, தயவு செய்து அவருடைய பெயருக்குப் பங்கம் வரக்கூடாது. நமக்குள் ஏற்பட்ட சிநேகத்தினால், உன்னை வேண்டிக்கொள்கிறேன். என் பொருட்டு நீ இரகசியத்தைக் காப்பாற்றுவாய் என்று நம்புகிறேன். நான் அடுத்த மாதம், என் தகப்பனார் மாளிகைக்குப் போகிறேன். தயவு செய்து அங்கே வந்து என்னைக் காண வேண்டுகிறேன். ஒரே இரவிலே நீ என் மனதையே கொள்ளை கொண்டாய்

மதுரவல்லி

என்று கடிதம் எழுதிக் கடிதத்துடன், ஒரு தங்கச் சங்கிலியும் தந்துப் பணிப்பெண் மூலம், மலர்க்கொடிக்கு அனுப்பினாள்.

பணிப்பெண், மலர்க்கொடியிடம் இக்கடிதத்தைக் கொடுக்கும் நேரத்திலே, மிட்டாதாரர் தலைவிரிக்கோலமாக வேதாந்தத்துடன் அங்கு வந்து சேர்ந்தார். வேலைக்காரி பயந்தாள், பதறிக் குளறினாள். கடிதத்தை வாங்கிப் படித்தார் மிட்டாதாரர். “கள்ளி! அடி பாதகி! மோசம் போனேனே!” என்று கூறினார். மலர்க்கொடி தவிர மற்றவர்கள் நடுங்கினர். அவள் மட்டும், அஞ்சவே இல்லை.

“நேற்று இரவு, நீ மதுரவல்லியுடனா இருந்தாய்?” என்று கோபத்தோடு கேட்டார் மிட்டாதாரர்.

“ஆமாம்! நேற்றிரவு முழுவதும், உன் மனைவியுடன் பேசிக்கொண்டிருந்தேன். மிக நல்லவள்” என்று