பக்கம்:சிறுகதைகள், அண்ணாதுரை.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

சிறுகதைகள்


வந்தாள். தகப்பனாரைப் பார்த்து, “அப்பா! இனி இங்கே நான் இருக்க முடியாது” என்று கூறினாள். “உன்னை இங்கே மானங்கேட்டு வைத்திருக்க எந்த மடையனும் சம்மதிக்கப் போவதில்லை” என்று மிட்டாதாரர், போர் முரசு கொட்டினார். மிராசுதாரர் வாள்வீச்சு ஆரம்பித்தார். “நாக்கை அடக்கிப் பேச வேண்டும். நான் கோபக்காரனல்ல! ஆனால் கோபம் வந்துவிட்டதோ பிறகு நான் மனிதனல்ல” என்றார் மிராசுதார். மகள் பக்கம் சேராமல் இருப்பாரா தகப்பனார். “ஊர் சிரிக்கும் உன் பெண் யோக்யதை தெரிந்தால், இந்தக் கடிதத்தைப் பார்” என்று கூறிக்கடிதத்தைக் கொடுத்தார். மிராசுதாரரிடம் மிட்டாதாரர் கொடுத்த கடிதத்தைப் படித்துவிட்டுக் கொஞ்சம் பதறி மகளைப் பார்த்து “நீயா இது போல எழுதினாய்? யாருக்கு?” என்று கேட்டார் மிராசுதாரர். வேதாந்தாச்சாரி அதே சமயத்தில் மலர்க்கொடியைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்தார் களத்துக்கு.

“இவளுக்குத்தான்” என்று மதுரவல்லி பதிலளித்தாள் நிதானமாக.

“சதிர் ஆடினவள் தானே” என்று கேட்டார் மிராசுதாரர் குழம்பிக்கொண்டே.

“ஆமாம் அப்பா! சதிராடிய இவளை நடுநிசியிலே இந்த யோக்கியர் சரசமாட அழைத்தார். இவள் என் அறைக்குள் ஓடி வந்துவிட்டாள்” என்று கூறினாள் மதுரவல்லி.

மிட்டாதாரரை மிராசுதாரர் முறைத்துப் பார்த்தார், “இது யோக்யதையா?” என்று கேட்பதற்கு பதிலாக.