பக்கம்:சிறுகதைகள், அண்ணாதுரை.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

சிறுகதைகள்


வளைச் சரசமாட அழைத்தாய். அவளுக்கு உன் கிழச்சேட்டை பிடிக்கவில்லை. அவளைச் சமாதானப்படுத்தினாள் என் மகள். அதற்கு அவள்மேல் பாய்கிறாய் நாய்போல. உனக்கு மனைவி ஒரு கேடா?” என்று மாளிகை அதிரும்படி கூவினார். தன் மிராசு ஆட்களை அழைத்தார். இரட்டை வண்டிகள் தயாராயின!

வேதாந்தமும் மிட்டாதாரரும் குசுகுசுவென்று பேசலாயினர்.

“எப்படி விஷயத்தைச் சொல்வது?”

“சொன்னால் நமக்குத்தானே மானக் குறைவு.”

“சொல்லாவிட்டால் மிராசுதாரர் கோபம் அடங்காதே.”

“சொல்லிவிட்டால், நம்மைப்பற்றி என்ன நினைப்பார்?”

“கோபித்துக்கொண்டு பெண்ணை அழைத்துக்கொண்டு போய்விடுகிறாரே, பிறகு அனுப்பாவிட்டால் என்ன செய்வது?”

“கோபம் குறைந்த பிறகு அனுப்புவார் என்று சும்மா இருந்து விடுவோமா இப்போது.”

“நாம் சும்மா இருந்துவிட்டால், விஷயம் அவனாலேயே தெரிந்துவிட்டால்.”

இவ்விதம் வேதாந்தமும், மிட்டாதாரரும் மந்திராலோசனை நடத்திக்கொண்டிருக்கும்போதே மிராசுதாரர், பிரயாணத்துக்குத் தயாராகிவிட்டார். மதுரவல்லி ஒரு