பக்கம்:சிறுகதைகள், அண்ணாதுரை.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

சிறுகதைகள்


கிடைத்துவிடும். அது ஒன்றுதான் வாழ்க்கையிலே எனக்கு இருக்கும் திருப்தி” என்று திருவேங்கடம் சொல்லவில்லை. ஆனால் அவன் எண்ணம் அதுதான், சுந்தரியின் பருவ நிலையைப் பற்றியோ, கனகுவின் காதல் விஷயம் பற்றியோ, அந்தக் காதலை அவன் வீட்டு நிர்ப்பந்ததினால் கைவிட வேண்டிநேரிட்டது பற்றியோ, ஊரூராகச் சுற்றிக் கொண்டு ஒய்வுக்கு மடங்களிலே தங்கி, தேர் திருவிழாக் காலங்களிலே, திருப்தியாக வாழ்ந்து வந்த திருவேங்கடத்துக்கு யாரும் சொல்லவில்லை.

கனகுவின் மனைவியானாலே இலுப்பப்பட்டியார் மகள் காவேரி, அவளுக்கு கனகுவோ, வேறு யாரோ சொல்லவில்லை ஆப்பக்கடையக்காரின் மகளிடம் கனகு காதல் கொண்டிருந்த கதையை. எப்படி அவ்வளவு பணக்காரப் பெண்ணிடம் இதைப் பேசுவது என்ற பயத்தால்.

இவ்வளவுதானா, கனகுவின் இஷ்டப்படி சுந்தரி சில வேளைகளில் நடந்து கொண்ட விஷயத்தை யாரும் தனபாக்கியத்துக்குச் சொல்லவில்லை.

“இது ஏன் இந்தப் பெண் இவனோடு இப்படிக் குலாவுகிறாள்” என்று தனபாக்கியம் பல சமயங்களிலே எண்ணினதுண்டு. சொன்னதில்லை. “அடி அம்மா, ஜாக்கிரதை, அவன் அப்படி இப்படி என்று ஏதாகிலும் கெட்ட பேச்சுச் சொன்னால் கேட்காதே. அம்மாவிடம் சொல்லிவிடுவேன் என்று மிரட்டி வை” என்றும் சுந்தரிக்கு அவள் தாயார் சொல்லவில்லை. கனகு கெட்டப் பேச்சுப் பேசியிருந்தால் தானே, சுந்தரி அம்மாவிடம் தானாகவாவது