பக்கம்:சிறுகதைகள், அண்ணாதுரை.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தீப்பளியுங்கள்!

59


“நம்பள் கடையிலேதான் இந்த மனுஷன் வந்தான். கொஞ்சம் இருட்டு. நம்பள் கடையிலேயும் விளக்குச் சரியா இல்லை. எண்ணெய் ரேஷன் காலம். சங்கிலி கொடுத்தான். ‘எத்தனை சவரன்?’ இது நம்பள் கேட்டது. ‘எடை போட்டு பார் சேட்!’ அவன் சொன்னான். நம்பள்கி சந்தேகம். என்னா! சங்கிலி கொண்டாந்தவன் எடை சொல்லாமலே ஏன் இருக்கான்னு யோசிச்சான். நம்பள் சந்தேகம் வந்தாச்சா, உடனே போலீசுக்கு ஆள்விடுவான். பத்து வருஷமா நம்பள் வியாபாரம் இப்படித்தான். சாயா சாப்பிட்டு வர்ரேன்னு சொல்லிப் போனேன். 308 கான்ஸ்டபிள் மூலைக் கடை பக்கம் இருந்தான், கூப்பிட்டு வந்து காட்டினேன், லாக்கப் ஆனான். நம்பள், ராம்ஜி தயவிலே ஆபத்திலே மாட்டாமே தப்பினான்.”

இது மற்றொரு சாட்சி, சதாசிவம் வாக்குமூலம்:

“தங்க முலாம் பூசிய சங்கிலியை விற்றுத் தந்தால் எனக்குப் பாதி பாகம் தருவதாக மகாலிங்கம் என்னைக் கூப்பிட்டான், சங்கிலியையும் காட்டினான். நான் இம்மாதிரி திருட்டுக் காரியத்துக்கு உடந்தையாக இருக்க முடியாதென்று சொல்லிவிட்டேன்.”

308 நம்பர் கான்ஸ்டபிள், “சேட் வந்தழைத்ததும், நான் கடைக்குப் போனேன். என்னைப் பார்த்த உடனே இவன் முகத்திலே பயம் வந்துவிட்டது. ‘ஏதடா சங்கிலி’ என்று கேட்டேன். பதில் சொல்லாமல் மரம் போலிருந்தான். இதற்குள் சேட், உறைத்துப் பார்த்து: ‘அரரே! இது பொன் இல்லை, பித்தளை’ என்று சொன்னார். உடனே இவனை லாக்கப் செய்தேன்.” இப்படியே சாட்சியங்கள்