பக்கம்:சிறுகதைகள், அண்ணாதுரை.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

சிறுகதைகள்


ஒலி காட்டு மிருகங்களுக்கு கீதமாகவில்லையா? வானத்திலே ஒளி வீசும் நட்சத்திரங்கள், கண்களுக்கு விருந்தளிக்கவில்லையா? அதுபோலத்தான், மதுரவல்லி காண்போர் கண்களுக்கு விளங்கினாள். வெறும் செல்வன் வீட்டுப் பெண்ணல்ல. கொஞ்சம் படித்தவள். அதிகம் தெரியாதென்றாலும், ஆடை அணிகளிலே புது ‘பாஷன்’, மினுக்குப் பொட்டுகளிலே புதுரகம், ஜடை சீவலிலே புதிய முறை கற்றுக்கொள்ளும் அளவு தெரிந்துவிட்டது. அந்தஸ்து, அழகு, அலங்காரம் என்னும் மும்மணிக்கோவையாளுக்குக் கொவ்வை இதழ், குளிர்மதிப் பார்வை, குறுநகை கோகில த்வனி இவ்வளவும் கூட்டுச் சரக்காயின. மாகாளிப்பட்டியார் மனதிலே அலைமோதியதிலே ஆச்சரியமென்ன! மிட்டாதாரரின் விருப்பத்தை; மிராசுதாரருக்கு முதன்முதல் கூறியபோது அவர் புதுக் குதிரையின் விஷயமாகக் கவனம் செலுத்திக் கொண்டிருந்ததால், “பார்ப்போம்! அதற்கென்ன! செய்வோம்” என்று சம்பிரதாயமாகக் கூறினார். மாகாளிப்பட்டியார் மகா சந்தோஷமுற்றார். இனி நமக்கென்ன குறை! கடனும் தீரும், கனியும் கிட்டும் என்றெண்ணிக் களித்தார். ஆனால் அவர் பழைய வண்டி! மதுரத்துக்கு ஏற்றவரல்ல!!

மாகாளிப்பட்டியார் ஜரூராகத் திருமண கோலத்திலே கவனம் செலுத்தி வரலானார். நரைமயிர் கருக்குந்தைலங்களென்ன, நவஜீவன் லேகிய வகைகளென்ன. சில்க் மேலாடைகளும், சீமைக் கமல மோதிரங்களும், சிறிய சைஸ் கைக்கடிகாரமும், சிங்கமுகத் தங்கப்பூண் போட்ட கைத்தடி ஆகியவைகளென்ன, மாகாளிப்பட்டியாரின் மாப்பிள்ளைக் கோலம் மலர்ந்துவிட்டது. மேலும்