பக்கம்:சிறுகதைகள், அண்ணாதுரை.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

சிறுகதைகள்


மாம் தெய்வம்! திக்கற்றவர்களுக்குத் தெய்வம் துணை என்பது பாட்டி கதை” என்று அழுதுகொண்டே கூறினாள்.

“அழாதே அக்கா! ஆண்டவன் இருந்துதான், என்னை இங்கே அனுப்பி வைத்தார்” என்று சொன்னான், அந்தச் சாந்தமூர்த்தி. “ஆமாம் உன்னைப்போல ஈரமுள்ள நெஞ்சு கொண்டவர்கள் வந்துதான் ஆண்டவனின் மானத்தைக் காப்பாற்ற வேண்டியிருக்கிறது” என்று அவள் பதறிப் பேசினாள். பத்து ரூபாய் கேட்கிறார் டாக்டர் என்பதைக் கூறினேன். பத்து ரூபாய் என்றதும் பாவம், மகாலிங்கம் பயந்து போனான். அவனிடம் ஏது அவ்வளவு பணம்? அவன் என்னைப் போல் ஒரு ஏழை. எனக்காவது ஒரு குழந்தை அவனுக்கு நாலு. எனக்கு ஒரு இடம் இருந்தது வேலை செய்ய, அவனுக்கோ ஒரு வேலையும் நிலையாக இருப்பதில்லை. நோயாளி மனைவி, வயதான தாய், வருமானம் கட்டை. இந்த லட்சணத்திலே பத்து ரூபாய் தர முடியுமா அவனுக்கு? “அப்பா நீ பக்கத்திலேயே இருந்தால் போதும், பத்து ஆயிரம் கொடுத்த மாதிரிதான். என் பிராணன் போகிற சமயத்திலே, உன்னைப்போன்ற ஒரு உத்தம சினேகிதன், பக்கத்திலே இருந்தால், அதுவே என் மரண வேதனையைக் குறைக்கும்” என்று நான் ஈனக் குரலிலே கூறினேன். எழுந்தான், “இதோ வருகிறேன்” என்றான். வெளியே போனான். வேதனையைக் காணச் சகியாமல் வெளியே போனான் என்று நான் நினைத்தேன். அரைமணி நேரத்திற்கெள்ளாம், டாக்டருடன் வந்தான். ஊசி போட்டார். என்னைப் பணம் கேட்கவில்லை. அதிலிருந்து ஜுரம் படிப்படியாகக் குறையத் தொடங்கிற்று. நான் எழுந்து நடமாடும் சக்தி பெறுகிறவரையிலே, ரொட்டியும் அவன்