பக்கம்:சிறுகதைகள், அண்ணாதுரை.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

சிறுகதைகள்


“ஆனால் மறந்துவிடாதே, மகாலிங்கம் செய்திருக்கும் குற்றத்தை” என்று மாஜிஸ்ட்ரேட் கவனப்படுத்தினார். “ஆம்! அவன் தண்டிக்கப்பட வேண்டியவன்” என்பதை நினைத்ததும், என் உடல் குலுங்கிற்று. இப்படிப்பட்டவனுக்குத் தண்டனை! அவன் காட்டிய சிநேக வாஞ்சை, மனிதாபிமானம், ஆபத்தில் உதவுதல், இவைகளுக்குப் பரிசு கிடையாதா? இவைகளைக் கவனிப்பவர் இல்லையா? இல்லை! ஏன்? அவன் திருடன்! தியாக புருஷன் திருடனானான்! பௌர்ணமியிலே அமாவாசை இருக்க முடியுமா என்று நான் கேட்டேன் பைத்தியக்காரத்தனமாக! இதோ இருக்கிறதே!! கருணையைப் பொழிந்த மகாலிங்கம், களவுமாடியிருக்கிறான்!!

“இன்னொரு வாக்குமூலம் கேள்: “தர்மதுரையே! மகாலிங்கம், மகாயோக்கியனுங்க. பெரிய குடும்பம். பிழைப்புக்காக, யார் காலால் இட்ட வேலையும் தலையால் செய்பவனுங்க என் மகன். அவன் சின்ன வயசிலிருந்தே யோக்யனுங்க. கஷ்ட ஜீவனம், அந்தக் கஷ்ட ஜீவனத்திலேயும், பசி என்று சொல்லி யாராவது வந்துவிட்டா போதுங்க, தன் வயிற்றுக்குப் போதாவிட்டாலும் பரவாயில்லை என்று சொல்லி, அவர்களுக்குச் சோறு போடுவாங்க. கெட்ட நினைப்பே கிடையாதுங்க. அவனை நீங்க காப்பாற்றாமபோனா, நாலு குழந்தையோடு அவன் பெண்ஜாதி நடுத்தெருவிலே நிற்கும். நானும் அப்படித்தான். வயசு அறுபதுக்கு மேலே ஆகுதுங்க” என்று கூறி என் காலில் விழுந்து அழுதாள் மகாலிங்கத்தின் தாய். அவள் வாக்குமூலத்திலிருந்து மகாலிங்கம், சாது, யோக்யன், அன்பு காட்டுபவன் என்று ஏற்படுகிறது. ஆனால்