பக்கம்:சிறுகதைகள், அண்ணாதுரை.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தீர்ப்பளியுங்கள்

67


சமயத்திலே, இவன் அதிர்ஷ்டச் சீட்டு கட்டியிருந்தான். அதிலே நூறு ரூபாய் கிடைத்தது, ஆனந்தமடைந்தான். கடன் தீரும், குடும்பத்துக்குச் சௌகரியமாகும், மற்றவர்களுக்கு உதவி செய்யவும் முடியும் என்று மகிழ்ந்தான்.

அழுக்கு உடையும், தலைவிரி கோலத்துடனும் தள்ளாடி நடந்து கொண்டு, யாரோ ஒருவன், மகாலிங்கத்திடம் வந்து சேர்ந்தான் சனியன் போல. அவனுடைய நிலைமையைக் கண்டதும், மகாலிங்கத்தின் மனம் பாகாய் உருகிவிட்டது. “ஐயோ! சாப்பிட்டு எத்தனை நாளாயிற்றோ? பார்க்கவே பரிதாபமாக இருக்கிறதே” என்று சொல்லித் தன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போயிருக்கிறான். அவன் தண்டச் சோற்றைத் தாராளமாகத் தின்றுவிட்டு, “ஐயா! நான் பர்மாவிலிருந்து கால்நடையாக வந்தவன், ரங்கூனில் பெரிய வியாபாரி. போராத வேளையால் இந்தக் கோலம் வந்தது” என்று தன் கதையைக் கூறலானான். பர்மாவிலிருந்து பயங்கரமான ஆபத்துக்குள்ளாகிப் பல மக்கள் வதைப்பட்டதை மகாலிங்கம் ஏற்கனவே கேள்விப்பட்டவன். பத்து நாள் அன்னாகாரம் இல்லாமல் அவதிப்பட்டவர்கள், காட்டு ஜாதியாரால் கொலையுண்டவர்கள் என்று பல சோகச் சேதிகளைக் கேட்டிருந்தான். ஆகவே, பர்மாவிலிருந்து வந்தேன் என்று சொன்ன உடனே மகாலிங்கத்துக்குக் கண்ணிலே நீர் ததும்பிற்று.

வந்தவன், “என் குடும்பம் அடியோடு நாசமாகிவிட்டதப்பா!” என்றான். மகாலிங்கம் அழுதுவிட்டான் . எப்படியோ நான் வந்து சேர்ந்தேன். திக்கு இல்லை திசை தெரியவில்லை. நீ கிடைத்தாய் பழனி-