பக்கம்:சிறுகதைகள், அண்ணாதுரை.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுடுமூச்சி

71


இந்த அர்ச்சனையைப் பெற்றுக் கொண்டு, ஆறுமுக முதலியார், சும்மா இருந்தாரா? இருப்பாரா? அவர் கையில் என்னமோ, கணக்குப் புத்தகந்தான் இருந்தது. மனம்?

“சனியன் இன்னும் போய்த்தொலையவில்லையே” என்று மௌன பூஜை செய்துகொண்டிருந்த கணக்கெழுதுபவனை, ஆறுமுக முதலியார், “ஏண்டா தின்னுகூலி”, என்று திட்டினார். “அந்த சோம்பேறி இன்னும் மாலையைக் கட்டினானோ இல்லையோ” என்று, அதே நேரத்தில் எந்த மாலை விற்பவன் தன் தாயாரிடம் முதலியாரை “உருத்திராட்ச பூனை” என்று அர்ச்சித்துக் கொண்டிருந்தானோ, அந்த மாலை விற்பவனைப் பற்றிச் சொன்னார்; ஒரு வினாடி ஓய்வெடுத்துக் கொண்டார். “போய் ஆகணும், போகலைன்னா விடப்போறானா அந்தப் பணம்பிடுங்கி” என்று முணுமுணுத்தார். கோயிலிலே அதே நேரத்தில்தான் குருக்கள் வேறோர் ‘பக்தரிடம்’, முதலியாரை “பெரிய பக்திமான்” என்று அர்ச்சித்தது. அழகான ‘பதத்தை’ ஆனந்தமாகப் பாடிக் காட்டிய ‘வித்வானை’ விட்டுப் பிரிய மனமில்லாத வேதம், முதலியார் வருகிற வேளையாகிறது என்று கூறின நேரமும் அதுதான். அவள் தந்த அர்ச்சனை, அந்தக் “கிழக்குரங்கு” என்பது. அவளுக்கு முதலியார் அர்ச்சனை செய்யாமல் விட்டாரா? நாலைந்து பத்து ரூபாய் நோட்டுக்களை மணிபர்சில் எடுத்துத் திணித்துக்கொண்டே, ‘மானசீக பூஜை’ செய்தார். “இன்று தராவிட்டா, அந்த அல்லி தர்பார் பெரிசா இருக்கும்” என்று. “பைத்தியம்” கோயிலுக்குப் போகிற நேரமாகுது என்று, முதலியாரின் இரண்டாந்தாரம் இராமி சொல்லிக்கொண்டிருந்தது போலவே, முதலியாரும் மனதுக்-