பக்கம்:சிறுகதைகள், அண்ணாதுரை.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுடுமூஞ்சி!

73


எட்டுமணிக்குக் கடைக்கு வருவதும், மாலை ஆறு மணிக்குக் கிளம்பி பூமாலை வாங்கிக்கொண்டு புவனேஸ்வரி கோயிலுக்குப்போய் அங்கு வைத்தீஸ்வர ஐயரிடம் விபூதிப் பிரசாதம் வாங்கிக்கொண்டு தாசி வேதம் வீட்டுக்குப் போய் அங்கு எட்டு, ஒன்பது மணி வரையில் கொஞ்சம் நிம்மதியாக இருந்துவிட்டுப் பிறகு வீட்டுக்குப் போவார், இரண்டாந்தாரம் இராமியின் கோபத்தைப் பெற்றுக்கொள்ள.

இராமி, தாய் வீட்டிலே “கோபக்காரி” என்று பெயரெடுத்ததே இல்லை. ஒரு சமயம், இராமியின் தகப்பனார், கோபால முதலியார், சொல்லத்தகாத வார்த்தையெல்லாம் சொல்லித் திட்டினார்; தாயார், “பவிஷு கெட்டவளே!” “குலத்தைக் கெடுத்தவளே!” என்றெல்லாம் ஏசினாள். இராமி “மரம்போல” நிற்பாள் அல்லது ‘மலமல’ வென்று கண்ணீர் வடிப்பாள், எதிர்த்து ஒரு பேச்சுப் பேசினதில்லை. பேசுவது நியாயமல்ல என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்வாள். அவ்வளவுக்கும் காரணம், அந்த “எதிர் வீட்டுப் பிள்ளையாண்டான்” தான். அவனிடம் இராமி உள்ளத்தைப் பறிகொடுத்து விட்டாள்! பெற்றோர்களுக்குக் கொஞ்சம் ‘வாடை’ அடித்தது; பெண்ணைத் திட்டி அடக்கினார்கள். அந்தச் சமயத்திலே திட்டும்போதெல்லாம், இராமி கோபித்துக் கொண்டதே இல்லை. புருஷன் வீட்டுக்கு வந்த பிறகு தான், அவளுக்கு அந்தக் “கோபம்” ஏற்பட்டது.

தாய் வீட்டிலே, எவ்வளவோ ‘திட்டுக்கள்’ கேட்டாலும், இராமிக்கு ஒரு நம்பிக்கை, அந்த நம்பிக்கையால் ஒரு சந்தோஷம் எப்போதும் அவள் உள்ளத்திலே இருந்து

10