பக்கம்:சிறுகதைகள், அண்ணாதுரை.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

சிறுகதைகள்


டான். அதுதானே தெரியவேண்டும் என்று துடித்தாள் இராமி. எப்படிக் கேட்பது என்று பயந்தாள், கொஞ்ச நேரம். கேட்டால் என்ன என்று தைரியம் பிறந்தது. ‘நல்ல கதை’ என்று கேலி செய்தாள் மெள்ள.

“நல்லாயில்லை? சரி, நீ சொல்லு நல்ல கதையாக” என்று ஆறுமுக முதலியார் கொஞ்சத் தொடங்கினார். அது போன்ற கொஞ்சுதலைக் கண்டு வேதம் அவருக்குத் தந்த அர்ச்சனைதான் ‘கிழக்குரங்கு’ என்பது. இராமி! பேசவேயில்லை. ‘இராமி! உண்மையைச் சொல்லட்டுமா? நான் தான் அந்தக் கலியாணம் நடக்க முடியாதபடி தடுத்தேன். அவனுக்கு இஷ்டந்தான். ஆனா நான் கண்வைச்சா வேறே ஆசாமியிடம் சிக்குமா எதுவும், மண்டித் தெருவிலே போய்க் கேட்டுப் பாரு. அடேயப்பா! ஆறுமுக முதலி, விலை பேசி விட்டாரு நமக்கு வேண்டாம் அவனிடம் போட்டின்னு இலட்சாதிகாரி எல்லாம் ஓடி விடுவாங்க. எதற்கும் தைரிய இலட்சுமி வேணும். பட்டணத்தான் பேச்சைக் கேட்டுவிட்டு உங்க அப்பன் பல்லை இளிச்சிட்டான். பார்த்தேன், தைரியத்தைக் கைவிட்டேனா? ஆறுமுகமா தைரியத்தைக் கைவிடுகிறவன். ஒரு யோசனை வந்தது. நேரே ஐயர் வீட்டுக்குப் போனேன். ‘சாமி!’ன்னு சொல்லி ஒரு கும்பிடு. ஐந்து நோட்டு பத்து ரூபா நோட்டு; என்ன முதலியார் என்று கேட்டார். ‘உங்க தயவாலே இராமியை இரண்டாந்தாரமாக அடையணும்’ என்று சொன்னேன். "அட பாவமே! நேத்துத்தானே பொண்ணு ஜாதகத்தை ஏகாம்பரம் மாமன் கொண்டு வந்து கொடுத்திருக்கான்" என்றார். ‘தெரிஞ்சுதான் சாமி! நீங்க மனசு வைச்சா எதுவும் ஆகும்’ என்றேன். கொஞ்ச நேரம் யோசிச்சார். "பொருத்தம்