பக்கம்:சிறுகதைகள், அண்ணாதுரை.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுடுமூஞ்சி!

79


இல்லைன்னு சொல்லலாமோ?“ என்று என்னையே கேட்டார். “சொல்லலாம்! ஆனா வேறே ஜோதிடர்களைக் கலந்தாளான்னா’? என்று நான் கேட்டேன். ‘அதைத் தானே நானும் யோசிச்சிண்டு இருக்கேன்“ என்று ஐயர் இழுத்தார். உடனே ஒரு யோசனையை வீசினேன். ‘பெண் ஜாதகத்தைக் கொஞ்சம் மாற்றிவிடுங்க. எவனிடம் கொடுத்தாலும் பொருத்தமில்லைன்னு சொல்லறமாதிரியா மாத்தல் இருக்கணும், பொண்ணு மூல நட்சத்திரமுன்னு மாத்திவிட்டா போதும். மூல நட்சத்திரத்திலே பெண் கட்டினா, மாமியாரை மூலையிலே உட்கார வைச்சுடும்னு சாஸ்திரம் இருக்கே, அதுபோதும், பட்டணத்தான் கிட்டச் சொல்லிவிடுங்க. பக்குவமா ஜாதகத்தை மாத்திவிடுங்க’ என்றேன். ஐயர் தயவாலே, உன் நட்சத்திரம் மூலமாக மாறிவிட்டது. பட்டணத்தான் விழுந்தடிச்சு ஓடினான். ஏகாம்பரத்தின் காலிலே விழுந்து, ‘தம்பி என் பேச்சைக் கேளு. அந்தப் பெண்ணை மறந்துவிடு, அந்தச் சனியன் மூல நட்சத்திரமாம். உங்க அம்மா மூணே மாசத்திலே சாவாளாம்’ என்று சொல்ல, ஏகாம்பரத்தின் தாயார் என்னைச் சாகடிக்கத்தானா அந்தச் சண்டாளியைக் கட்டிக்கப் போறேன்னு கேட்க, வீடு ஒரே அமர்க்களமாயிடுத்து, ஒண்ணும் பேச முடியலை. அந்தப் பெண் வேண்டாம் என்று ஒரேயடியாகச் சொல்லிவிட்டான் ஏகாம்பரம். வேறே ஜோதிடன் கிட்டக் கூடக் கேட்டுப் பார்த்தானாம். எல்லோரும் மூல நட்சத்திரம் ஆகாது என்றே சொன்னார்கள், வேறே என்ன சொல்வார்கள்? புத்தகத்திலே அப்படித்தானே எழுதியிருக்கு. ஆனா அவனுங்க கண்டாங்களா பிரம்மா உன்னைப் பூச நட்சத்திரத்திலே பிறக்க வைச்சாரு. உன் புருஷன் அதை மூல