பக்கம்:சிறுகதைகள், அண்ணாதுரை.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

சிறுகதைகள்


இலேசானதல்ல. நீண்ட காலமாகன்னோ நடந்து வருகிறது” என்று சமாதானங் கூறினார்.

வேலையாளொருவன் ஓடோ டி வந்தான் அப்போது. “எஜமான்! பெரிய ஆபத்தாயிடுத்துங்களே! வண்டி மரத்திலே மோதி, தூள் தூளாயிட்டுதுங்கோ, குதிரைக்கும் பலமான அடிப்பட்டதுங்க. எதுவோ ஒரு மாடு மிரண்டு ஓடி வந்துங்க, குதிரை காலைக் கிளப்பியடித்தது. அடக்க முடியலே. வண்டிதான் பழசாச்சிங்களே, மரத்திலே மோதி…” என்று விபத்து விபரத்தைக் கூறிக்கொண்டிருக்கையிலே, மிராசுதார், வேகவேகமாகச் சென்று விபத்து நடந்த இடத்திலே, வண்டியும், குதிரையும் கண்டு கஷ்டப்பட்டார். குதிரை அவரைப் பார்த்த பார்வை, என் மீது தவறு இல்லை! எனக்கேற்ற பாரமான பலமான வண்டியைப் பூட்டவில்லையே, அது உங்கள் தவறு” என்று வாதாடுவது போலிருந்தது. குதிரையின் காலில் பலமான அடி. பிறகு அது சரியான சவாரிக்கு இலாயக்குள்ளதாக இருக்கவே முடியாது என்று மிருக வைத்தியர் கூறிவிட்டார். அருமையான குதிரை போச்சு என்று ஆயாசப்பட்டார் மிராசுதார். ஆயாசமேலீட்டால் அதிகம் பேசவும் முடியாதிருந்த நேரத்திலே மாகாளிப்பட்டி பார்ப்பனர், மிட்டாதாரரின் சம்பத்து விசேஷத்தைப் பற்றிச் சரமாரியாக அளந்து மிராசுதாரரைச் சரிப்படுத்திவிட்டார். கல்யாணத்துக்குத் தேதி குறிக்கப்பட்டது. அந்த வட்டாரமே கண்டு அதிசயிக்கும்படியான ஆடம்பரத்துடன் கல்யாணம் நடந்தது. கல்யாணத்துக்கு வந்தவர்கள் விருந்து, வேடிக்கை, கேளிக்கைகளை அனுபவித்துவிட்டு, காயமுற்ற