பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/510

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவருக்கு...?

பலராமன் தேர்ந்த ஞானியல்லன்; மிருக முமல்ல.

மென்மையும் நளினமும் கொண்ட ஒரு பெண்ணே எதிர்பார்த்தவனுடைய உள் ளத் திற்குப் பாலாவில்ை உவவகை யளிக்க முடியவில்லை. தன் குழந்தையின் தாய் என்கிற முறையில், அவளை வைத்துக் காத்து வந்தான்் பலராமன்.

அவன் சிறவுமில்லை-தணியவுமில்லை. ஆனால் பெண் உள்ளம் வேறு விதமாக இருந்தது. பாலா சிறியெழுந்தாள்.

தான்் மனைவியாக நடத்தப்பட வேண்டும் என்று அவனுடன் வாதிட்டாள்.

(வானத்து நிலா களையிழந்து காணப் பட்டது. மேற்கே நகர்ந்து நகர்ந்து அது செல்வதைப் பார்த்தவாறு பாலா சிந்தித் தாள்...) அன்று ஒரு நாள்

அவனும் அவளும் தனித்து நின்றபோது பாலாவின் கண்ணிர் அவனை உலுக்கியது. என்னமோ உண்மைதான்். ஆனால் அது இரக்கம் தோய்ந்த கண்ணிா. பெண் என்கிற இரக்கம் ஒன்று தான்் அவன் உள்ளத்தில் மேலோங்கி யிருந்தது.

'பாலா, ஏன் அழுகிருய் ? உனக்கு இந்த வீட்டிலே என்ன குறை ? நானும் அம்மாவும் உன்னுடன் அன்போடு தான்ே இருக்கிருேம் !...'

"அன்பா...?

பாலா கணவனைக் கோபத்துடன் விழித் துப் பார்த்தாள். 'சோறும் துணியும் கொடுத்து நடத்தப்படும் வேலைக்காரி என்று சொல்லுங்கள்...'

அதற்குமேல் பலராமனே அவள் உள் ளத்தைப் புரிந்துகொண்டான். அவளுக் குப் பதில் கூற அவனுல் முடியவில்லை.

85

அன்று அவள் உள்ளத்தில் பொங்கி யெழுந்த ஆத்திரம் அவள் உடலையும் மனத் தையும் தியாகப் பொசுக்கியது. அப்புறம் தான்் அவள் பிறந்த வீடு சென்ருள். அங்கு அவளுக்கு இருந்த ஒரே ஆதரவு அவளுடைய அனனன ஒருவன தான்.

கணவனுக்குத் தன் கசப்பைக் காட்டிக் கடிதங்களாக எழுதிக் குவித்தாள். அந்த வீட்டில் அவள் மனைவியாக இருக்க விரும் பிஞளேயன்றி, இரக்கம் காண்பிக்கப்பட வேண்டிய பெண்ணுக இருக்க விரும்ப வில்லை. முரண்பட்ட இந்த இரண்டு உள் ளங்களும் பெரும் போராட்டத்தை மாதக் கணக்கில் நிகழ்த்திக் கொண்டே இருந் தன. முடிவில் பாலா கணவனை விடடுப் பிரிந்து, தன் வாழ்க்கையை வகுத்துக் கொள்ள ரயிலேறி விட்டாள்.

பலராமனுக்கு முதலில் இவையெல்லாம் அதிர்ச்சியாக இருந்தன. அவரவர் கட்சி யிலே நியாயம் இருந்தது. இடையிலே இருக்கும் ஜக்குவை முதலில் யாருமே கவனிக்கவில்லை. பிள்ளை இருவருக்கும் பொது தான்ே !

'ஜக்குவை நீ அழைத்துப் போய் என்ன செய்வாய் ? அவன் வளர வளர உன்னல் அவனைக் காப்பாற்ற முடியுமா ?' என்று கேட்டாள் மாமியார். அவள் கேள்வி நியா

யமானது. *

'முடியுமோ, முடியாதோ! அவன் என் குழந்தை......" பாலாவின் மூர்க்கத்தனம் ஓங்கியிருந்தது.

"உனக்காவது ஜக்கு இருக்கிருன், ஆறு

தலுக்கு. அவன் பட்ட மரமாக நின்று விட்டானே..." ---

கிழவியின் கண்களில் கண்ணிர் குள

மாகத் தேங்கி நின்றது.

தாயின் கண்ணிரைக் கண்ட பலராமன் வேதனை பொங்க ஜக்குவை அனைத்துக்

கொண்டான்.