பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/530

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

** ::::::::

প্ল

3

வந்து விட்டது பாழும் படபடப்பு. அது ஒய்வதற்குள் அந்தக்கிழவி அலங்க

மலங்கப் பதறி விட்டாள். மார் பைத் தடவி விட்டாள். தன் மேல்

சாய்த்துக் கொண்ட மகனின் கன்னங் களை ஆசையுடன் வருடினுள்.

‘'வேண்டாம் மாது.. வேண்டாம். நீ எனக்குப் பிள்ளையாக இரப்பா... நான் அதிகம் ஆசைப்படக் கொடுத்து வைக்காத ஜென்மம்." அந்த அம் மாள் தன் வேதனையை விழுங்கிய வாறு மகனிடம் கூறி அவனைத் தேற்றி ஞள்.

மாதவனுக்குச் சிறிது நேரத்தில் படபடப்பு அடங்கி விட்டது. எப் பொழுதும் போல அவன் அறையில் நாற்காலியில் சாய்ந்தவாறு தொடு வானத்தையும், அதில் அடுக்கடுக்காய்

மலைத் தொடர்களைப் போல் பரவிக் கிடக்கும் வெண் மேகங்களையும் பா ர் த் து க் கொண்டிருந்தான்். தொடு வானத்தைத் தவிர மற்ற இட மெல்லாம் ஒரே நீலம். காயும் கதிர வனின் ஒளி, நீள் விசும்பில் சுடர்விட் டுக் கொண்டிருந்தது.

அந்த ஒளிப் பிழம்பை ஊடுருவிச் செல்கிருப் போல் இரு பறவைகள் விண்ணில் 'விர் ரென்று சென்றன. ஒன்று ஆண், மற்ருென்று பெண். பறந்து சென்ற அப்புட்கள் ஓங்கிப் பரந்து வளர்ந்திருத்த மாமரத்தின் உச்சியில் உட்கார்ந்தன. பெண் பறவை ஊட, ஆண் பறவை அதைச் சுற்றிச் சுற்றிப் பறக்க....

'ஆகா! எத்தகைய காட்சி இன் பம் மாதவன் தனக்குள் சொல்லிக்