பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்று சொன்னேன். பெரியவர் நம் பக் கத்துச் சாப்பாட்டுக்குச் சொன் னர்.

"உங்களுக்கு வடக்கே யிருந்து பழக்க மாச்சே? சப்பாத்தி பழக்கமில்லேயா” என்று கேட்டேன்.

"பழக்க மில்லாமல் என்ன அம்மா? முழுக்க முழுக்க அதைத் தான்் இனிமேல் சாப்பிடப் போகிறேன். கடைசியாக சாம் பார், ரசம் சாப்பிடுவோமே யென்று...' எனக்கு அவர் அடிக்கடி கடைசி கடைசி யென்று சொல்வது பிடிக்கவில்லே, ஆரம்ப மும், இறுதியும் தெரியாத ஒர் உலகில் நாம் வாழ்ந்து வருகிருேம். அந்தந்த விடிை யில் நடப்பவை உண்மை. கடந்து போன வை கனவுகள். கடக்க இருப்பவைகளேப் பற்றி நமக்கென்ன தெரியப் போகிறது? ரயில் பெட்டி துரங்கி விழித்தாற்போல் திடீரென்று க ல க ல ப் பு ஏற்பட்டது. அடுத்த பர்த்தில் தூங்கிக் கொண்டிருந்த

பெண் விழித்துக் கொண்டாள். துக்கம் செருகும் விழிகளே என் பால் திருப்பி, என்ன ஸ்டேஷன் வரப்போகிறது’.

என்று கேட்டாள்.

கூடுர்’.

சாப்பாட்டுக்காரர் வந்து போய் விட்டாரா? அச்சச்சோ.'

ஏன்? நீங்கள் தூங்கி விட்டீர்களா?'

'ஒl

"ஆமாம்...பரவாயில்லே நிறையச் சாப் பாடு இருக்கிறது. கொஞ்சம் சப்பாத்தி வாங்கிக் கொள்ளலாம் என்று பார்த் தேன்...'

கான் சொல்லியிருக்கிறேன். சப்பாத்தி வரும். தருகிறேன்.”

"ஓ! தாங்க்ஸ். நீங்கள் கொஞ்சம் புளி யஞ்சாதம் எங்களிடம் வாங்கிக் கொள்ள வேண்டும்......"

பின்னே சும்மாவா சப்பாத்தி தருவ தாகச் சொன்னேன்?"

சிரிப்பின் அலேகள் பெட்டி முழுவதும் பரவின.

அவள் துரங்கிக் கொண்டிருந்த குழந்தை யைச் சிண்டி எழுப்பி அதனுடன் யாடப் போய் விட்டாள். பரபரவென்று பறக்கும் வயது. ஏதையாவது செய்யா விட்டால் பொழுது போகாது போலும்.

கூடுரில் சாப்பாடு வந்தது. ஒரேகுடும்பம் போல் நாங்கள் சாப்பாட்டைப் பகிர்ந்து