பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4


ஒ. " ஏண்டா, இப்படி இரைக்க இரைக்க ஓடி வரே : யாரோடு சண்டை ?...' ஐந்து நிமிஷம் சென்ற பிறகுதான் அவளுல் பேச முடிந்தது. சண்டையு மில்லை, மண்டையு மில்லை” என்றபடியே கொல்லேப்புறம் நோக்கி நடந்தான். அவன் முதுகைப் பார்த்தபடியே கனகம் நின்ருள். மாநிறம் என்றுகூட சொல்வதற்கில்லை. கறுப்புதான். பதின்மூன்று வயதே ஆன சிறுபிள்ளையின் உடல்போல் இல்லை. தோலில் வழுவழுப்பும் மினுமினுப்பும் தென்பட வில்லை. வறட்சியாய், தடித்துப் போன மாதிரி தோன்றிற்று. கனகத்தினுள்ளே தாய்மையுணர்ச்சி பொங்கியெழுந் தது. ஏண்டா, இப்படித் தெரு நாய் மாதிரி அலைகிருய் ? படித்துப் படித்து ஆயிரம் தடவை சொல்லிவிட்டேன். ஒரே ஒரு பிள்ளை என்று சலுகை காட்டினுல் பாழாய்ப் போகிருயே! அப்பாவிடம் அடி வாங்காத நாள் உண்டா ? தெருப் பசங்களைச் சேர்த்துக் கொண்டு ஏன் தத்தாரியாய்த். திரிகிருய் ? கிட்ட மாமாவின் பிள்ளையைப் பார். எத்தனை சமர்த்தாக இருக்கிருன் !...” அவள் அங்கலாய்ப்பு படர்ந்து நீண்டுகொண்டே போயிற்று. கொல்லக் கதவை மடேர் என்று சாத்திவிட்டு, மேலண்டைத் தாழ்வாரத்திற்கு வந்தான், துரை. ஒரு. எம்பு எம்பி, மேலே கொடியில் உலர்த்தியிருந்த மேல் துண்டை எடுத்துக் கொண்டான்.

  • அம்மா, நான் குளிச்சுட்டு வந்துடறேன்...” அவன் சொற்களிலேதான் எத்தனை பணிவு, அன்பு, மரியாதை தேனெழுக்குப்போல் பேசுகிருன்! இவனைப் போய் முரட்டுப் பிள்ளே என்கிருர்களே, ஊரார்? இவனளவு சாமர்த்தியம் மற்றவர்களுக்கு வரட்டுமே, பார்க்கலாம். சிறு பிள்ளையானதால் கொஞ்சம் விளையாட்டுத் தனமாய் இருக்கிருன். அவ்வளவுதான் ! -