பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96


புதிய வேலையைத் தேடிப் போகவில்லை. ஆளுல் பாவம், அவரை அறியாமலே ஒருவிதத் தேக்கம் அவருடைய வாழ்வில் புகுந்து கொண்டது. தாம் எதிர்பார்க்கும் அளவுக்குப் பெரியதான பதவி ஒன்று தம்மைத் தேடி வராது என்ற உணர்வு அவருக்கு ஏற்பட்டபோது, நிலைமை கட்டுமீறிப் போயிருந்தது. தாமே வேலை தேடிப் போவ தென்ற பொறுப்பைத் தள்ளிப் போட்டார். இறுதியில், யாரிடமும் வேலை கேட்பதில்லை என்ற தீர்மானம் அசைக்க முடியாதபடி உறுதிப்பட்டு விட்டது. ராமலிங்கம் சேர்த்து வைத்த பணம் கொஞ்சம் இருந்தது. அது படிப்படியாகக் கரையத் துவங்கிய போது தான் செல்லம்மாள் திகிலடைந்தாள். ஆரம்பத்தில் அவளால் கணவனின் வேலையின் மை பற்றிக் கவலைப்படா மலே மாதக் கணக்கில் இருக்க முடிந்தது. ஆனல் கவலை என்பதாக ஒன்று தோன்றியவுடன், அது நாளுக்கு நாள் வளர்வதை உணர்ந்தாள். இந்த நிலையில்தான் ஒருநாள் அந்தப் பெரும் புயல் மூண்டது. அன்று மாலையில் ராமலிங்கம் எங்கோ வெளியில் சென்றிருந்தார். செல்லம்மாளைக் கால முதலே ஒருவித மனச்சோர்வு வாட்டிக் கொண்டிருந்தது. இப் படியே இன்னும் எத்தனே நாள் ?’ என்ற கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள். மாலே ஸ்கூலிலிருந்து திரும்பி வந்திருந்த வைத்தி அந்தச் சமயம் பார்த்து ஏதோ சொல்லி வைத்தான். அம்மா, நாளைக்கு ஸ்கூலுக்குப் போகும்போது எல்லாமாகச் சேர்த்து பத்து ரூபாய் கொண்டு போயாக வேண்டும் ' என்று கத்தின்ை அவன். உடனே ஆத்திரத்தில் செல்லம்மாள் தன்னை மறந்து அவன் முதுகில் ஒரு அடி வைத்தாள். முதன் முதலாகக் குழந்தையையும் அவள் அப்போது தான் கை நீட்டி அடித்தாள். அடித்தபோது அவள் தன் வசத்தி லில்லை; அடித்து விட்டு, கூடவே சில வார்த்தைகளைக் கொட்டினளே அப்போதும் அவள் தன் வசத்திலில்லை. 'உன் அப்பாவுக்கு மறுபடி குடும்பப் பொறுப்பு வந்து, அவரும் மற்றவர்களைப் போல் பணம் சம்பாதித்து இங்கே