பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99


நடத்துவோம். அது போதும்’ என்று சொன்னர். செல்லம்மாளுக்குத் திக் கென்றது. வேண்டுமென்றே, செல்லம்மாளுடன் தனிமையில் தங்காமல் தட்டிக் கழித்தார். குழந்தைகள் ஸ்கூலுக்குப் போகுமுன் ஆபீஸுக்குப் போய்விடுவார். மாலையில் குழந்தைகள் திரும்பிய பிறகுதான் திரும்பி வருவார். இரவில் குழந்தைகளுடனேயே படுத்து அவர்களுக்கு முன்பே தூங்கிப் போய் விடுவார். ஒருநாள் செல்லம்மாள் பொறுமை இழந்து, குழந்தைகள் முன்னிலையிலேயே அவர் காலில் விழுந்து கெஞ்சிள்ை. அதற்கு அவர், “ இந்த அவலப் போராட்டம் குழந்தைகளுக்குத் தெரிய வேண்டாம் ’’ என்று சொல்லிவிட்டு வெளியே போய் விட்டார். அன்று பூராவும் வீட்டுக்கே திரும்பவில்லை. இன்னுெரு நாள் தனிமையில் அகப்பட்டுக் கொண்டார் ராமலிங்கம். அன்று இரண்டிலொன்று தீர்ந்தபோது செல்லம்மாளுக்குப் பேரிடி ஒன்று தலைமேல் விழுந்து விட்டது போலிருந்தது. அவர் சொன்னர் : இதோ பார், நம்முடையது புது மண வாழ்க்கையல்ல. இனிமேல் என்னுல் அந்தப் பொறுப்பற்ற வாழ்க்கைக்குத் திரும்ப முடியாது. என் திறமைக்கு அருமையான உத்தியோகம் இருக்கிறது. என் அன்புக்கு மணியான குழந்தைகள் இருக்கிருர்கள். அதுபோதும் எனக்கு. நீ இன்னமும் இளம் பெண்ணல்ல. உன்னேப் பொறுத்த மட்டில் இனி நான், பணம் சம்பா தித்துக் கொட்டும் ஒரு யந்திரமே தவிர வேறில்லை.” செல்லம்மாள் தோற்றுப் போய் விட்டாள். நாளடைவில் போராடுவதற்குக்கூட மனத்தில் தெம்பு இல்லாமல் போய்விடும் என்று தோன்றியபோது, செல் லம்மாள் திடீரென்று வைராக்கியம் பூண்டு வீட்டு வாழ்க் கையிலேயே துறவு மேற்கொண்டாள். சுயநலத்தை உதறி யெறிந்தாள். பத்து வருஷத்து மணவாழ்வுடன் திருப்தி யடைந்தவளாகத் தன் குழந்தைகளிடம் அதிக அன்பு செலுத்தத் தொடங்கினுள். * . . . . ;