பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5


" சீக்கிரம் வந்துவிடடா, துரை '-ரேழியைக் கடந்து கொண்டிருந்தவனைப் பார்த்துக் கூவினுள், கனகம்.

  • சரி, அம்மா. ’’ * நீபாட்டுக்குத் துளையாதே. அக்கரைக்கும் இக் கரைக்குமாய் நீச்சல் போடாதே. உச்சி வேளே. ஈ, காக்காய் இருக்காது, குளத்தங்கரையிலே. ஐயோ, பிள்ளேயே! ஒன்பது மணிக்கெல்லாம் குளிச்சிட்டு வந்திருக் கப் படாதோ ? ...”*

'அஞ்சு நிமிஷத்திலே வந்துடறேன், அம்மா !” * ஜாக்கிரதை... ’’ அரை மணிக்குப் பின்புதான் துரை திரும்பி வந்தான். கனகத்திற்கு அவன் திரும்பி வரும்வரை வயிற்றில் நெருப்பு. ஒவ்வொரு நாளும் இப்படித்தான். துரை தலைவாரிக் கொண்டு கண்ணுடியை ஆணியில் மாட்டின்ை.

  • சாப்பிட வரயா?* " அப்பா வந்துடட்டுமே” கனகத்திற்குக் கனகாபிஷேகம் செய்தாற் போல் உள்ளம் குளிர்ந்தது.

" அவர் எப்போ வருவாரோ? ஏண்ட பசிக்கல்லே ? மணி பன்னிரண்டாகிறது. எட்டு மணிக்குப் பிடி பழையது சாப்பிட்டதுதானே ?” . - . அவனுக்கு என்ன தோன்றிற்ருே, ' சரி, சாதம் போட்டுடு' என்ருன். கனகம் இலயைப் போட்டாள். எதிரில் வந்தமர்ந் தான், துரை. அவன் கண்கள் விரிந்தன. பேஷ், பேஷ் கீரையா?...இன்னிக்கு ரொம்ப நன்ன யிருக்கு! கொஞ்சம்தான் பண்ணினியோ?” தாய் பூரித்துப் போளுள்.