பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேப்பம் பழம் நா. பார்த்தசாரதி கிழக்கு வானத்தில் பகல் பூத்துக் கொண்டிருந்த நேரம். மண்ணுலகத்து இன்பமெல்லாம் ஒன்று சேர்ந்து காற்ருய் வீசுவதுபோல் வேப்ப மரத்துக் காற்று வீசிக்கொண்டிருந் தது. காகம் கரையும் ஒலி, மேல வீட்டுப் பாகவதர் பூபாளம் பாடும் அழகு, பக்கத்து வீட்டு மாட்டுக் கொட் டத்தில் பால் கறக்கும் ஒலி, தெரு வாசலில் சாணம் தெளிக் கும் ஒசை, இடையிடையே வாசலில் கோலம் போடும் பெண் கரங்களின் வ8ளக்குலுங்கல், கோவில் விசுவரூப மணியோசை காற்றில் மிதந்து வரும் நாதம். அடாடா அந்தச் சின்னஞ்சிறு கிராமத்தில் வைகறைப் போது எவ்வளவு அழகாயிருக்கிறது? உழவு மாடு பூட்டிக் கொண்டு போகும் உழவன், காய்கறிக்காரன், தயிர்க்காரி, பால்காரன் என்று தெருவில் மனிதர்கள் நடமாடுகிற உயிர்த் துடிப்பில் எத்தனே எழில்? கிழக்கே தெரு முடியும் இடத்துக்கு அப்பால் தென்னே மரக் கூட்டத்தில் சூரியோ தயத்தின் ஒளி பரவும் அழகைப் பார்த்துக்கொண்டே