பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 O'Y யோடு சிற்சபேசனின் முகத்தைப் பார்த்துக் கொண்டு நின்ருள் அந்தச் சிறுமி. வானத்தில் மேகத்தைத் தேடும் வறண்ட நிலத்து உழவனின் முகம் போல் அந்த முகத்தில் ஒர் ஆசைத் துடிப்பு மிதந்தது. சிற்சபேசன் வாய் திறந்தார். " உன் பேரென்ன குழந்தை ?”

  • பட்டுன்னு சொன்னுத் தெரியும், சார் : இந்த ஊர்லே நான் வேலை செய்யற வீடுகளிலே கேட்டுப் பாருங்க சார் ! என்னைப் பற்றி நல்லபடியாச் சொல்லுவாங்க...”

“அதிருக்கட்டும்! நீ பள்ளிக்கூடத்திலே படிக்கலியா?”

  • எப்படி சார் படிக்க முடியும்? நான் சின்னவளா இருக்கப்பவே அம்மா போயிட்டா. அப்பாவுக்குச் சமையல் வேலை. கல்யாணம் கார்த்திகைன்னு முக்கால்வாசி நாள் வெளியூருக்குச் சமையல் வேலைக்குப் போயிடுவார். தம்பி அப்போ சின்னக் குழந்தையா இருந்தான். நான்தான் வீட்டோடு இருந்து பார்த்துக்கணும். தம்பி பெரியவன் ஆகி நெனேவு தெரியற சமயத்திலே அப்பாவும் செத்துப் போயிட்டா. அப்போ எனக்குப் பதினுேரு வயசு, பொறுப்பெல்லாம் என் தலையிலே விழுந்துடுத்து...”

" அதிலேயிருந்து இப்படித்தான் காரியம் செய்து சம்பா திச்சுக் குடும்பத்தைக் காப்பாத்தருயாக்கும் ?” " ஆமாம் சார் ! எங்களுக்கு வேறே யாரும் இல்லே. மாமான்னு ஒருத்தர் மெட்ராஸ்லே இருக்கார். பேருக்குத் தான் அவர் மாமா. அவராலே உபகாரம் ஒண்னுமில்லே. அப்பா போனப்போ கடிதாசு எழுதினேன். அவர் திரும்பிக் கூடப் பார்க்கலே.” . "வேறே யாரும் உறவு இல்லையா ?” "இந்த ஊரிலே இல்லே. எங்கெங்கேயோ இருக்கா. யாருமே எட்டிப் பார்க்கலே. பணம் காசு சொத்து சுகம்னு எட்டிப் பார்ப்பா. நாங்க ஏழைப் பட்டவான்னு இளப்பம். யாரும் இருக்கியா, செத்தியான்னு கூடக் கேட்க வரல. இந்த ஊர்க் கிராம முன்சீப் இருக்காரே, ரத்னம்