பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 £6 கெளரி தனது நகைகள் எல்லாவற்றையும் கழற்றித் தரையில் வைத்திருந்தாள். அழுதுகொண்டே என் மனைவியிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். " மாமி, அப்பா வண்டியில் வரும்போதே சொல்லி விட்டார், ' என்னிடமிருந்து சல்லிக் காசு பெயராது என்று. அவருடைய அப்பாவும்கூட ஜாமீன் கட்ட மாட்டேன்னு சொன்னுல் நான் என்ன பண்ணுவது.” என்னேக் கண்டதும் கெளரி என் முன்னே விழுந்து என் பாதங்களைப் பற்றிக்கொண்டாள். " மாமா, நீங்கள்தான் எனக்கு ஒரு வழி செய்யனும். இதோ, இந்த நகை யெல்லாத்தையும் வித்து அவரை அழைத்துக்கொண்டு வரணும். எனக்கு யாருமில்லை ; நீங்கதான் உதவனும் ” என்று கதறிஞள். அவளுடைய கண்ணிர் என் பாதத்தை நீராட்டியதுமே என்னுள் ஒரு புதிய சக்தி பிறந்தது. அவளுடைய வேண்டு கோளை நிறைவேற்றுவது என் கடமை என்று தோன்றியது. * மைனர் பெண்ணின் நகைகளே விற்பது அக்வளவு எளிதாக இருக்கவில்லை. நான் என்னுடைய செல்வாக்கை எல்லாம் உபயோகிக்க வேண்டி இருந்தது. வைத்தி ஜாமீனில் வெளியே வந்ததும் கெளரியிடம் பெரிய மாறுதல் ஏற்பட்டது. பெண்கள் வெகு விரைவில் முதிர்ச்சியும் அனுபவமும் பெற்றுவிடுவார்கள் என்பது வெறும் கவிதைப் பேச்சல்ல. தன்னுடைய பிறந்தகத்தையும் புக்ககத்தையும் உதறித் தள்ளிளுள் ; வைத்தியுடன் தனியா கவே வசிக்கத் தொடங்கி விட்டாள். தன்னுடைய கணவ னின் வழக்கை நடத்துவதற்காகத் தன் சக்தி முழுவதையும் உபயோகித்தாள். தையல், சமையல் வேலை இன்னது என்று ஒரு வேலை இல்லை; எல்லாம் செய்து பணத்தைத் தேடினுள். ஆல்ை கெளரி பட்ட பாடெல்லாம் வீணுயிற்று. வைத்தியநாதன் ஆறு மாதம் விலங்கு பூணவேண்டித்தான் வந்தது.