பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123 ' வா கெளரி, பணியைக்கூடப் பார்க்காமல் புறப்பட்டு வந்து விட்டாய் போலிருக்கிறதே?’’ என்று உபசாரம் கூறினேன். செல்லம் கெளரி வந்து விட்டாள் ” என்று என் மனேவியைக் கூப்பிட்டவண்ணம் கெளரியை அழைத்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்தேன். ': வா கெளரி ! செளக்கியமா ? ஏது இவ்வளவு தூரம்?’’ என்று வரவேற்ருள் செல்லம். இவதான் கெளரி. நான் சொல்வேனே அடிக்கடி திருநெல்வேலியிலே.........” என்று என் பெண் சுமதி தன் கணவனுக்கு அவளை அறிமுகப்படுத்தினுள். " வைத்தி எங்கே வரவில்லையா ?’ என்றேன் நான். * ஊஹூம்' என்ருள் கெளரி. " புளுவுக்கே வரவில்லையா? அல்லது......” என்ருள் செல்லம்.

ஆமாம். நான் தனியாகத் தான் இங்கே வந்திருக் கிறேன் கெளரியின் முகத்தில் சோகம் கப்பி விட்டது; "இனிமேல் நான் தனிதான் ’’ என்ருள் கெளரி.

" என்னது?’ என்ருள் செல்லம். நான் கெளரியின் நெற்றியைப் பார்த்தேன். அதில் துலங்கிய குங்குமம் விபரீதம் ஒன்றும் ஏற்பட்டு விடவில்லே என்று விளக்கியது. " என்ன கெளரி, உன்னே.........”* "ஆமாம் மாமா ஆமாம். நான் அவருக்கு வேண்டாத வளா போய்விட்டேன். பணம் மனிதர்கள் கையிலே சேர்ந்தால், குணமும் மாறிப்போவது சகஜந்தானே ! அவர் பெரிய சைக்கிள் கம்பெனி முதலாளி. அவருடைய பூர்வீக சொத்து வேறே இப்போ வந்து விட்டது. அதேைல பெரிய இடத்து சம்பந்தம் கிடைக்கிறதுக்குக் கேட்கனுமா ? ல்லது என்னைப் போல அப்பா, அம்மா எல்லோரையும் உதறிவிட்டு வ்ந்த துக்கிரிதான் அவருக்குத் தகுந்தவளா?"