பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129


" உன்னைத் தள்ள எப்படியடி மனசு வந்தது ?’ என்று ஆத்திரத்தைக் கொட்டினுள் என் மனைவி. ': மனசு என்ன மாமி, போன வருஷம் எனக்கு இருமல் விடாது ரெண்டு மாசமா இருந்தது. அதைக் கொண்டு டி. பி.,ன்னு டாக்டர்களிடம் சர்டிபிகேட் வாங்கிஞர். பிறகு தனக்கு வேண்டிய பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டார். நான் என்ன பண்ணுவேன். இங்கே அபலா சிரமத்திலே வேலே தேடிக்கொண்டேன்.” " ஏன் கெளரி, நீ அவன் மேல் கேஸ் போடுவது தானே?’ என்று நான் ஆத்திரத்துடன் கேட்டேன். கெளரியின் உதட்டில் ஒரு வறட்டுப் புன்னகை தோன்றி மறைந்தது. " மாமா, உங்களுக்குத் தெரியாதா? அந்த நாளிலே அவர் சிறைக்குப் போகாமல் இருக்கனும் என்று என்ன பாடுபட்டேன். இப்போ நானே இவர் ஜெயிலுக்குப் போவதற்கு வழி செய்யனுமா ? அந்த அவமானம் வேறு வேண்டுமா? எப்படியோ அவர் சந்தோஷமாக இருந் தால் சரி.’’ நான் தலே குனிந்தேன். குனியாமல் இருக்க முடியுமா? பெண்மையின் கம்பீரத்தை மதிக்காத பேதை அல்லவே நான், 27–10