பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 கவலை ميلا" பூநீரஞ்சனி ஒவ்வொரு முதல் தேதியும் மாணிக்கம் கடன் வசூல் செய்ய சிவசங்குவின் ஆபீஸ் வாசலில் ஆஜராகி விடுவார். தம்புச் செட்டித் தெருவில் உள்ள அந்தக் கம்பெனியின் வாசலில் ரஸ்தாவில் நின்றுகொண்டு ஜன்னல் வழியே மாணிக்கம் உள்ளே எட்டிப் பார்ப்பதும், சிவசங்கு தலையை உள்ளே இழுத்துக் கொண்டு பைல் கட்டுகளுக்கிடையே முகத்தைப் புதைத்துக் கொள்வதும், காரியாலய நண்பர்கள் கண்டும் காணுதது போலிருந்து ரசித்த ஒரு கண்ணுமூச்சி விளையாட்டு. பதினேந்து நிமிஷ விளையாட்டிற்குப் பிறகு சிவசங்கு-என்ன இருந்தாலும் கடன் வாங்கியவர் தானே? தோல்வியை ஒப்புக் கொண்டு, எச்சில் துப்பும் வியாஜமாக வெளியே வருவார். அப்புறம் எல்லாம் வழக்கம் போல் ! இவர் கெஞ்ச, அவர் மிரட்ட, இவர் தன் குடும்பக் கஷ்டங் களைக் கூறி அழ, அவர் தன் நெருக்கடியைச் சொல்லிக் கெஞ்ச, மறுபடியும் இவர் மிஞ்ச...... மாணிக்கம் இத்தனைக்குப் பிறகு அப்படி ஒன்றும் பிரமா தமாக வசூல் செய்துவிட முடியாது. சிவசங்கு சம்பளம்