பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 33 செய்வதாக எண்ணி அவள் செய்தது அந்த அண்ண னுக்குத் தெரியவே தெரியாது. நாற்பது ரூபாயில் மூன்று, நான் கு ஜீவன்களும் வாழ்கிருேமென்று சிவசங்கு நம்பியது அவரது குற்றமில்லை. அவரது தங்கையின் குற்றமுமல்ல தான் ! ஏதோ ஒரு நாள் பைக்ராப்ட்ஸ் ரோடில், மளிகைக்கடை மாணிக்கம், வழிமறித்துக் கேட்டபோதுதான் சிவசங்கு வுக்கு தான் ஒரு கடனுளி, மாணிக்கத்திடமும் என்ற விஷயம் தெரிய வந்தது ! தெரிந்தவுடன் விடுவிடென்று வீட்டுக்குப் போய்-இரைச்சல் போட்டார் மகளிடமும், தங்கையிடமும். வேறு என்ன செய்து விட முடியும்? கடனையா அடைக்கப் போகிருர் ! ' எல்லாம் உங்களுக்காகத் தானே அண்ணு ? உங்க ளுக்கு இருக்கிற கவலையிலே இத்தையும் வேறே சொல்லணு மான்னு தான்... ...’’ என்று புதுமையான சமாதானம் ஒன்று சொல்லி பிலாக்கணம் வைத்தாள் தங்கை. பொங்கிப் போட்டுக் கொண்டிருக்கும் புண்ணிய வதியைக் கோபித்துத்தான் என்ன லாபம் ? நம்ம பெண் ணுக்கும் உலக அனுபவம் கிடையாது. உலகத்திலே மனுஷின்னு தலேகாட்டற முன்னே தான் கதவை அறைஞ்சு சாத்திட்டாங்களே. உ.ம்...உ.ம்...” இரண்டு கையாலும் நெற்றிப் பொட்டை அமுக்கி விட்டுக் கொண்டார் சிவசங்கு. ரொம்ப இதமாக இருந்தது. மாணிக்கம் அன்று தெருவில் கேட்டதோடு நின்று விடவில்லை. கடனேக் கொடுத்துவிட்டு, நடையாக நடப்ப தற்கோ, சால்ஜாப்பு சமாதானங்களைக் கேட்டுக் கொண்டு திரும்பவோ சலித்துக் கொள்ள முடியுமா? பார்த்த இடத்தி லெல்லாம் சிவசங்குவிடம் பாக்கியைக் கேட்டுத் தொந் தரவு செய்தார். அவரை சமாதானப்படுத்த-பணத்தைத் தருவது தவிர வேறு வழியேயில்லை. ஆகவே சம்பளம் வாங்கும் தேதியன்று இரவு எட்டு மணிவரை ஆபீசிலேயே உட்கார்ந்திருந்து விட்டு, ஊரடங்கியபின் திருடனைப் போல வீட்டுக்குள் நுழைவார் சிவசங்கு. மாணிக்கத்திடம் முதல்