பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135


இதுக்கு மேல் நாம் சாப்பிட்டால், செலவு நம்மையே சாப் பிட்டு, ஏப்பம் விட்டிருக்கும். பங்க் நாயரும் நம்ம மொகத்துக்காக விரட்டாமல் இருக்கான். வேருெருத்தன. யிருந்தன, மேத்துண்டை யல்ல பிடுங்குவான். நாமும் மரியாதையைக் காப்பாத்தனும், இந்த மாசம் அவனுக்கு ஒரு பத்து ரூபாத்தாளாவது கண்ணிலே காட்டணும். நாளே மறுநாள் அவன் கடைக்குப் போகவாணுமா?

  • உடன் பிறந்த பிறப்பு எனக்கென்று உழைச்சு ஓடாய்த் தேயுது. அதற்கு ஒரு புடவையாவது வாங்கவேண்டும். அவளுடைய மகள்.அந்தக் குஞ்சுக்கு, பட்டுப் பாவாடை யில்லாவிட்டாலும், கொஞ்சம் சுமாரான துணியிலாவது தைக்கணும். நமக்கும்...கோட்டில் இருக்கும் கிழிசலில், ஆள் என்ன, ஆனேயே புகுந்து புறப்படலாம் போல இருக்கு. உடம்பை மூட பனியன், பனியன் கந்தலே மறைக்க சட்டை, அந்தச் சட்டையோட பவிசு, தெரியாம மூட கோட்டு போட்டால், அது பெரிசா பல்லே இளிக்கிறது : ஒரு நல்ல கோட்டு, அட இனிமே கோட் எதுக்கு ? அடெண்டர் கிருஷ்ணன் போடருனே அந்தத் துணியிலே ஜோரா ஒரு சட்டை தைச்சு... அது இல்லாட்டியும், நல்ல பனியணுவது இரண்டோ, ஒண்ணுே வாங்கித்தான் ஆகணும்.
  • நமக்கும் நேரங்கெட்ட நேரத்திலே இருமலும் இளைப்பும். அதுக்கு ஏதாவது, மருந்து மாயம் தின்னுத் தான் தேவலே. திடீர்னு நாம மண்டையைப் போட்டுத் தொலைச்சா. வீட்டிலிருக்கிற படைங்க பரதேசிக் கோலம் போடவேண்டி வந்துடும். முடிஞ்ச வரை உடம்பைக் காப் பாத்தி, உடம்பைத் தேச்சுச் சம்பாதிக்க வேண்டியது தான். சுவரை வச்சுத்தானே சித்திரம் எழுதணும். நம்ம ஆயுச் வேத டாக்டர் சர்மாகிட்டயாவது, கோட்டைத் தெரு பண்டிதர் கிட்டயாவது லேகியமே ஏதோ வாங்கி முழுங்க வேண்டியதுதான். இத்தினி நாள். சம்பாதிச்சுக் கொட் டிட்டு, நமக்குன்னு ஒரு பத்து ரூபா செலவழிக்க என்ன ? உழைச்சு உழைச்சு ஊரான் கிட்ட கொடுக்கத்தானே சரியா யிருந்தது. இந்த முதல் தேதி நமக்குன்னு கட்டாயமா