பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 43 உப்பிட்டுப் பிசைந்து அவன் கையில் உருட்டி உருட்டிப் போட்டாள். கடித்துக் கொள்ள கருவாட்டுத் துண்டுதான். * சோறு என்னவோ வாடை வீசுது. கண்டம் நல்லா ருக்குது பொண்ணே......' என்ருன் ராசப்பன். செல்லி அவனே முறைத்துப் பார்த்தாள். " பொண்ணுமே பொண்ணு! இன்னும் கொஞ்சம் போனல் கண்ணும்பான்......?’’ இருவரும் வெளியே வந்தார்கள். மங்கிய ஒளியில் செல்லி அவனே நன்ருகக் கவனித்தாள். கரனே கர8ணயாக வலுவேறிய கைகால்கள். புசுபுசுவென்று வளர்ந்திருந்த தாடி மீசை. ஆள் நன்ருக இருந்தான். அவன் செல்லியைக் கவனித்தான். அள்ளிச் செருகிட்ட கருங் கூந்தல் முத்துப்பல் வரிசை மின்ன வாளிப்பான பெண் ணுகத்தான் இருந்தாள் அவள். கழுத்து வெறிச்சென்று கிடந்தது. தாலிக் கயிறு ! அதைத்தான் காணுேம். அவனுக்குப், புரிந்து விட்டது அவள் விதவை என்று. வேப்பமரம் தாலாட்டுப் பாட, ராசப்பன் மேல் துண்டை விரித்துப் படுத்தான். கனவிலே ஒரே செல்லி மயம்தான்! கோழி கூவும்போது செல்லி கண் விழித்தாள். விழித் தவள் வேப்பமரத்தடியைத் திரும்பிப் பார்த்தாள். ராசப் பன் மேல் துண்டை உதறி முண்டாசு கட்டிக்கொண்டிருந் தான். புது ஆள் ஒருவன் வந்திருப்பதை வட்டாரத்தினர் அனைவரும் பார்த்தார்கள். யாரோ பிழைக்க வந்தவன் என்று அவரவர் வழியே போய்விட்டார்கள். செல்லி, ஐயர் வீட்டுக்குப் போய்விட்டாள். கதிர்வேலு எண்ணெய்க் கடைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தான். 'ஏண்டா ! பகல் சோத்துக்கு வூட்டுக்கு வருவியா. இல்லை, உங்க அத்தை ஆட்டிலே போய்ப் பூந்துக்குவியா?” என்று கேட்டாள் செல்லி, -