பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f 46 媒缺 ஏன் շ»: " ஏன? அவன் கேக்குருன் கண்டபடி என்ன......”

  • கேக்காம இருப்பான பின்னே ! பேசாமே நீ இந்த எடத்தை விட்டுக் கிளம்பு......”

செல்லிக்கும் அது தேவலே என்றுதான் பட்டது. நாலு பேர் பழிக்க, பெற்ற மகன் தூற்ற அங்கிருப்பதைவிட, வெளியில் போய்விடுவதும் நல்லதுதானே ? அன்றிரவு நிலவு உச்சியில் வரும்போது ராசப்பன் பின்னல் செல்லி, புடவையைச் சுருட்டிக்கொண்டு கிளம்பி விட்டாள். வேப்ப மரத்து நிழலில் படுத்திருந்த கதிர்வேலு வின் காலடியில் சிறிது நின்ருள் அவள். பத்து மாதம் சுமந்து பெற்று பத்து வயசு வளர்த்தவள் ஆயிற்றே ! சொட்டு சொட்டு என்று கண்ணிர்த் துளிகள் அவன் மேல் விழுந்தன.

  • கதிர்வேலு! நீ மாத்திரம் என்னை வெறுக்காம இருந் தியாளு நான் ஏண்டா போப் போறேன்...” இவ்விதம் மனம் அலற, ராசப்பன் பின்னடி நடந்து விட்டாள் அவள்.

அடுத்த நாள் காலையில் செல்லி ஓடிவிட்ட செய்தியைக் கதிர்வேலு அமைதியுடன் தாங்கிக் கொண்டான். அவள் அத்தைக்காரி மட்டும் ஒரு பாட்டம் இரைந்து விட்டு ஒய்ந் தாள். காலச் சக்கரத்தின் சுழற்சியில் அகப்பட்டு நசுங்கும் மனிதர்களில் இவர்கள் மட்டும் எம்மாத்திரம்? வாலிபஞன ராசப்பனுக்கும், நடுத்தர வயதைக் கடந்த செல்லிக்கும். சில வருஷங்களுக்கு அப்புறம் உடல், மனுேநிலை எதிலும் ஒத்துக் கொள்ள வில்லை. அள்ளிச் செருகிட்ட கூந்தல் செம்பட்டையாய்க் காற்றில் பறக்க, முன் பற்கள் இரண்டு தேய்ந்து விழுந்து விட, செல்லி கூனிக் குறுகி வண்டலூர் சாலை ஓரத்தில் இருந்த குடிசை வாசலில் உட்கார்ந்திருந் தாள். கால்கள் சூம்பிக் கிடந்தன. மூங்கில் குச்சிகளைப் போல் கைகள் சதைப் பிடிப்பற்றுக் காணப்பட்டன.