பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150


"அவனே ஒருத்தி கட்டிக்கோணும். அவன் குடியும் குடித்தனமும் ஆகோணும். இங்கே இருந்தா ஒழுங்கான வாழ்க்கை அமையுமா ?” கதிர்வேலு கிளம்பி விட்டான். அதன் பிறகு செல்லிக்கு ராசப்பனேக் கண்டால் வெறுப்பு வளர்ந்தது. என்னையும், எம் புள்ளையையும் பிரிச்ச பாவிப்பய என்று அவனே ஏசினுள். அவள் ஏச்சுக்களைப் பொறுத்துக் கொண்டான் ராசப் பன், " நான் அங்கே போயி அவனைப் பாக்கனும் ' என்று ஆசைப்பட்டாள் அவள். " தே...பைத்தியம்! சும்மாக்கிட 1 கல்லப்போட்டு உன் மண்டையை நசுக்கிப் போடுவாங்க...’’ என்ருன் ராசப்பன்.

  • எம்மவன் அவங்களைச் சும்மா விடமாட்டான் ’’ என்று சவால் விடுத்தாள் அவள்.
  • அதையும்தான் பாக்கப் போறியே...” என்று வெறுப்புடன் கூறிவிட்டு வேலைக்குப் போய் விட்டான் ராசப்பன்.

அவன் சென்றதும் செல்லி அண்டை அயல் மூலமாகப் பணம் கொடுத்து பழங்கள் வாங்கினுள். பலகாரங்கள் வாங் கிளுள். மூட்டை கட்டிக் கொண்டு பஸ் ஏறி, பழைய ஊருக்கு வந்து சேர்ந்தாள். அங்கேதான் எத்தனை மாறுதல் ? வேம்புலி அம்மன் கோவில் மண்டபத்தில் உட்கார்ந்து, தெரிந்தவர்கள் யாராவது வருகிறர்களா என்று பார்த்தாள். சொல்லி வைத்தாற்போல் அவள் நாத்திதான் வந்தாள். "ம்மே பூங்காவனம் !" என்று அழைத்தாள் செல்லி. அது அவள் செவியில் பேய்க் குரலாக ஒலித்திருக்க வேண்டும். விக்கித்து மண்டபத்தைப் பார்த்தாள் பூங்கா வனம். அப்புறம் ஊரே கூடி விட்டது அவளைப் பார்க்க.