பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158


" நானும் இல்லை ; ஆசையும் இல்லை...'-சிந்தாமணி யின் குரல் தொலைதுாரத்துச் சோக கீதமாக என் மனத்தை வ8ளத்துக் கொள்ளுகிறது. " தம்பீ காலக் கழுவிக் கொள்ளுங்கள்." நான் என் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தேன். பரமசிவம் பிள்ளை செம்பை என்னிடம் நீட்டிக் கொண்டிருந் தார். அவர் உள்ளத்தோடு கலக்காவிட்டாலும், சம்பிர தாயங்களில் அழகாகக் கலந்து கொள்ளத் தெரிந்த எங்கள் தெருப் பிரமுகர். அவருக்குப் பசியைவிடச் சம்பிரதாயம் முக்கியம். மற்றவர்களுக்குப் பிறர் துக்கத்தைவிடப் பசி முக்கியம். வெறும் வயிற்று வாழ்க்கை வாழும் அந்தக் கூட்டம் என்னைக் குளத்தில் விட்டு விட்டுப் பிரிந்து விட்டது. மயானத்துக்குப் போய் வந்தவர்கள், காலைக் கழுவிக் கொள்ளவேண்டும் என்ற சம்பிரதாயத்தைப் பரவசிவம் பிள்ளையைப் போன்ற யாரோ ஒருவர்தான் கொண்டு வந்திருக்கவேண்டும். மனத்திலிருந்த துக்கத்தைக் கழுவக் காலில் தண்ணிர் ஊற்றிக் கொண்டால் போதுமா ? நான் கட்டையாக நின்றேன். பரமசிவம் பிள்ளையே என்னுடைய காலில் தண்ணிரை ஊற்றி விட்டார். " வாருங்கள், உள்ளே போகலாம்.” அவர் ‘உள்ளே என்று சொன்ன என் வீட்டுக்குள் நேற்றுவரை எனக்கென்று எத்தனையோ அபிலாஷைகளும், இளங்கதிரில் மின்னும் பனி முத்தைக் கையில் எடுக்க விரும் பிய பைத்தியக்காரக் குணங்களும் இருந்ததுண்டு. இப் பொழுது அங்கே என் சிந்தாமணி இல்லை. பாசத்தைத் தழுவிப் படர்ந்த பைத்தியக்காரத்தனமும் இல்லை. எனக்கு உள்ளே என்ன வேலே ? வேலையைக் கருதியே. தொடங்கும் வாழ்க்கையின் பிரயாணம் என் காலடியில் அயர்ந்து தூங்கி விட்டதா?