பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 1

  • கனகம், கிட்டன மாமாவை அழைத்துக்கொண்டு வரச்சொல்லு. எல்லா விவரங்களையும் அவரிடம் சொல்லி விடறேன். விஜயத்தின் பிள்ளை ரொம்ப நல்லவன். அவன் இங்கேயே இருந்தால் உனக்கு ஆறுதல்; துனே, பின்னல், சொத்துக்கும்......”

" அதான் துரை இருக்கானே! வாரிசு இல்லாத சொத்து இல்லையே!......எனக்கு யாரும் துணை வேண்டாம். வேலைக்காரி இருக்கிருள். கூப்பிட்ட குரலுக்குக் கண்ணப் பன் இருக்கிருன்!...” பதில் சொல்வது வீண் என்று நினைத்தார் அருணுசலம். “ எல்லாம் துரை வருகிறவரை தானே !! அவன் வந்துட் டால் எல்லாவற்றையும் அவனே பார்த்துப்பான். முதல்லே, இந்த வீட்டை இடித்துப் புதிசாகக் கட்டச் சொல்லணும். குழந்தை இந்தப் பழைய வீட்டைப் பார்த்தாலே சிரிப் பான்! வாசற் கதவை யாரால் சாத்தித் திறக்க முடி . "" ...... ?لpgق அருளுசலம் கேட்டுக் கொண்டிருப்பதாக அவள் நினைப்பு. ஆல்ை, அவளுடைய குரல் கேளாத இடத்தைச் சேர்ந்துவிட்டார், அவர். - 缘由 碟 懿 滚 கிட்டா மாமாவுக்கு அறுபதாண்டு நிறைவுக் கல்யாணம் நிகழ்ந்து பத்துப் பன்னிரண்டு வருஷங்களுக்கு மேல் ஆகி யிருக்கும். அவருடைய வயதுக்காக இல்லாவிட்டாலும், குரலுக்காகவாவது எல்லோரும் அவரிடம் மரியாதை செலுத்தியாகவேண்டும். கிராமத்தில், அவர் வாக்குத்தான் கடைசித் தீர்ப்பு. நெறி தவருத மனிதர். எல்லா வீடு களிலும் அவருக்குச் சுதந்திரம் உண்டு. தெருவோடு போய்க் கொண்டிருந்தவர் திறந்து கிடந்த வாசலுக்கு அப்பால், நாற்காலியில் உட்கார்ந்திருந்த கனகத்தைப் பார்த்தார். உள்ளே நுழையலாமோ, கூடாதோ என்று சந்தேகப் படுபவரைப் போலத் தயக்கத் துடன் வாசற்படியருகே வந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிறுகதைக்_கோவை.pdf/17&oldid=830319" இலிருந்து மீள்விக்கப்பட்டது