பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 64 தான். என் பெண்ணின் அழகை எல்லாம் திரட்டிக் கொண்டு வந்திருக்கின்ருன் ! அந்தப் பொடியனுக்கு லவன் ’ என்று நாமம் சூட்டி ளுேம். அன்று எங்கள் வீட்டில் தடபுடலான பாயஸ் விருந்து. இப்பொழுது கூக்குரலிடும்படியாக என்ன வந்து விட்டது அந்தத் தம்பதிகளுள்? எல்லாவற்றையும் கடந்து போகிறவனுக்கு அதன் காரணத்தைப் புரிந்து கொள்ளாமல் போக மனம் வரவில்லை. அவற்றை நெருங்கினேன். லவன் ஏன் அப்படி அச்ை யாமல் கிடக்கிருன் : அவனைச் சுற்றிச் சுற்றி வந்து அலறு கிருளே சீதை, ஏன்? இரண்டு ஏன்களுக்குப் பிறகு ஒரு பதில் கிடைத்தது. லவன் இறந்துவிட்டான்! துக்கம் தாளாத சீதை அவ இனச் சுற்றிச் சுற்றிப் புலம்புகிருள். ராமன் சீதை செய்த அதே காரியத்தைச் செய்யவில்லை. அவன் சீதையின் கழுத் தில் கோதிக் கொடுக்கிருன். சீதையினுடைய மகன் அவனுடைய மகனும் தானே? பிறகு ஏன் அவன் அலறிப் புலம்பவில்லை? ராமன் பாசத்தில் கரைந்துவிடும் ஒரு மெழுகு உருண்டை. தன்னுடைய எல்லாத் துக்கத்திலும் மேலான துக்கத்தை அடைந்திருக்கிற அவன், இப்பொழுது ஏன் கொஞ்சம்கூடக் கரையாமல் சீதையைச் சுற்றி வருகிருன் ? புரிகிறது! துக்கத்தில் கரைந்தே விட்ட சீதையைச் சமாதானப்படுத்துவதற்காக ராமன் கல்லாகிவிட்டான். தன் கண்ணிரை வெளியே விடாமல் உள்ளத்துக்குள்ளேயே பாய்ச்சிக்கொண்டு தன் துணைவியின் கண் ணிரைத் துடைத் துக்கொண்டிருக்கிருன் :) நான் என்ன செய்தேன்? என் கண்ணிரைப் பெரிதாக நினைத்தேன். எனக்கு நேர்ந்த துக்கத்தை நீளம் நீளமாய்த் திரித்துக்கொண்டேன். அந்தக் கஷ்டத்திலிருந்து விடுதலை பெற உயிரை விடவும் தயாராகி விட்ட சுயநலக்காரனுக இருந்தேன்.