பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172


கீழே வீணையை மீட்டும் நாதமும் அக்கா பாடுவதும் அவளுக்குத் தெளிவாய்க் கேட்டன. ஆனல் என்ன? அவளுடைய பிஞ்சு மனத்தில் துயரத்தின் பாரம் அழுகை யாய் வெடித்துவிட்டது. அழுதுகொண்டே யிருந்தவள் அப்படியே தூங்கி விட்டாள். வெகு நேரம் கழிந்தது ! " பட்டு எழுந்திரம்மா! சாப்பிட வேண்டாமா ?” என்று எழுப்பினுள் சாவித்திரி. கண்ணே விழித்துப் பார்த்துவிட்டு, ' நான் ஒன்றும் வரவில்லை போ!' என்று சிணுங்கினுள் குழந்தை. அவள் பின்னலேயே உள்ளே வந்த அம்மா, "உன் பேரில் அவளுக்குக் கோபம், நீ மத்தியானம் அவளுக்குத் தலை பின்னிவிடவில்லை யென்று !’ என்று சிரித்துக் கொண்டே சொன்னுள். சாவித்திரி குனிந்து அவள் கன்னத்தில் முத்தமிட்டாள் பிறகு அவளே வாரியெடுத்து அணைத்துக்கொண்டு உள்ளே போளுள். அப்பொழுது அவள் விழிகளிலிருந்து கண்ணிர் முத்துக்கள் பட்டுவின் ரோஜாக் கன்னத்தில் சிதறின. குழந்தை தன் துயரத்தையெல்லாம் உடனே மறந்து அவளுடைய கழுத்தைத் தன் பிஞ்சுக் கரங்களால் கட்டிக் கொண்டாள். சாவித்திரியை அழைத்துப்போக அம்மா மாடிக்கு வந் தாள். அக்காவுடன் கூடவே பட்டுவும் மணப்பந்தலுக்குப் போளுள். கல்யாண முழுவதும் தன் அக்கா பின்னலேயே சுற்றிக் கொண்டிருந்தாள் குழந்தை. அந்தப் புதிய மாமாவிடம் அவளுக்குப் பெருத்த வெறுப்பும் கோபமும் உண்டாயின. ஊர்வலத்தின்பொழுது அவ்விருவருக்கும் நடுவில் உட்கார வேண்டுமென்று அடம் பிடித்தாள். அப்பா வந்து அதட் டியபொழுது அந்தப் புதிய மாமா, "பரவாயில்லை. அவளும்