பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 7 என்ன காரணத்தாலோ கனகத்தின் கண்களிலிருந்து பொலபொல வென்று கண்ணிர் பெருகி தலையணையை நனத்தது. அசையாமல் கிடந்தாள், அவள். எவ்வளவு நேரம் சென்றதோ, வாசலில் மாட்டுச் சலங் கையின் ஒலி கேட்டதும் கண் விழித்தாள், கனகம். துரை வாசலில் காத்துக்கொண்டு நிற்கிருனே ? சரேலென்று வாசற் கதவை நோக்கி நடந்தாள். அந்தப் பெருங் கதவை, வாசற் புறத்திலிருந்து, பூட்ஸ் அணிந்த காலொன்று படுவேகமாக உதைத்தது. அதன் வேகத்தைத் தடுத்து நிறுத்த முயன்றது, கனகத்தின் நெற்றி.

  • ஐயோ, துரை......”

'அம்மா’ என்று அலறியவன், கீழே விழுந்த அவளே அள்ளிய8ணத்தான். வெள்ளேச் சட்டை செஞ்சிவப்பாய் மாறியது. " அம்மா, அம்மா!...இதோ, பாரேன்...உன் மகன்... நான்.” - கனகம் மலங்க மலங்க விழித்தாள். நெற்றிப் பொட்டில் செந்நீர் பெருகிக் கண்களே மறைத்தது. துரை !’ என்ருள், ஒடுங்கிய குரலில். தன் வீட்டுத் திண்ணையில் இருந்தபடியே மாட்டு வண்டியைப் பார்த்த கிட்டா மாமா குப்புவுடன் வந்து வாசலில் நின்ருர். யாரு, துரையா !” என்றபடியே உள்ளே வந்தார். அரிக்கன் விளக்கின் மங்கலான ஒளியில், கனகத்தின் முகத்தில் ஜீவனுடன் விளங்கிய மென்னகை அவரைப் பார்த்துச் சிரித்தது. துரை வந்துட்டான்!” என்று அவர் செவியருகே கிசுகிசுப்பதைப் போலிருந்தது!

  • துரை, துரை என்று கிட்டா மாமா அலறியதையும் பொருட்படுத்தாமல், கால் சராய்க்குள் விட்ட கையும் குனிந்த தலையுமாய், இருண்ட தெருவில் அவன் நடக்கத் தொடங்கின்ை. - -

27–3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிறுகதைக்_கோவை.pdf/23&oldid=830350" இலிருந்து மீள்விக்கப்பட்டது