பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உருவத்தைத் தாண்டி ஆர். சூடாமணி' க க்ளிக் !’ கறுப்புத் துணிக்குள்ளிருந்து தலையை வெளியே இழுத்த மாணிக்கம் நீண்டதொரு பெரு மூச்சு விட்டான். எதிரே பெரியவர்களும் குழந்தைகளுமாய் உட்கார்ந்திருந்த கூட்டம் எவ்வளவு தூரம் அவன் பொறுமையைச் சோதித்துவிட்ட தென்று அவனுக்கல்லவா தெரியும் ! ஒரு நிமிஷம் அமைதியாய் உட்கார்ந்த கூட்டம் இப்போது சலசலத்துக் கலந்தது.

படம் சரியாய் வந்திருக்குமில்லே?" என்ருர் ஒரு நடுத்தர வயதினர்.

அதைப் பத்திக் கவலையை விடுங்க!” " எப்போ கொடுப்பீங்க படத்தை ?’ இது ஒரு பெண் மணி. வேறு. யார் இவ்வளவு அவசரப்படுவார்கள் ! " நாளை சாயங்காலம் கொடுத்திடறேன்." . அவ்வளவு நாழி ஆகுமா ?’ ஓர் இளைஞனின் மிடுக் கான குரல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிறுகதைக்_கோவை.pdf/24&oldid=830352" இலிருந்து மீள்விக்கப்பட்டது