பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22


எல்லாம் பகட்டு, ஆடம்பரம். வெளித் தோற்றம். படம் பிடிக்கும் கலேயே வாழ்வின் ஓர் இதயமற்ற, வெளிப் பூச்சான அம்சத்தைச் சித்திரிப்பதுதான். படம் நாளே சாயங்காலம் கிடைக்கும். என்ன அள விலே வேணும் ?” ' காபினட் லைஸிலே கொடுங்க.’’ தினம் இதே மாதிரிதான். மனிதர்கள் வருவதும் படம் எடுத்துக் கொள்வதும் வெளிப்புறத் தன்மைக்கு இலக் கணம் கூறும் ஒரு கலையாகவே அமைந்து விட்டது. மாணிக் கத்துக்கு அதுதான் சோறு போட்டது என்ருலும் மனித சமுதாயத்திலேயே ஒருவித இளக்காரம்-அதிகமாய்ப் போனுல் பொறுமையுடன் பார்த்துச் சிரிக்கும் ஒரு மேல் நோக்கு-ஏற்பட்டது அவனுக்கு. வாங்க ஸ்ார்.’’ ஓர் இளம் ஜோடி. புதுமணத் தம்பதி என்று சொல்லித் தான தெரியவேண்டும்? இருவர் முகத்திலும் சிரிப்புப் பொங்கி வழிந்தது. ‘'நீ உக்காரு புஷ்பா. நான் பக்கத்திலே நிக்கறேன். அப்படித்தான் போட்டோ....”* "ஊஹாம் அழகு கொஞ்ச பெண் சிணுங்கினுள். " நல்லா யிருக்குது ! நான்தான் நிப்பேன்.” "கூடாது. அப்புறம் கால் நோவு வந்தால் நானில்லே பிடிக்கணும்?’’ சூழ்நிலையை மறந்த உற்சாகம் ஆண் மகனுக்கு. ஆல்ை பெண் மறக்கவில்லை. " சும்மா இருங்க ’’ என்று கோபித்தாள். குரல் பொய்த்தது. " அது போகட்டும், கையைப் பிடிச்சுக்கிட்டு நிக்க லாமா ?” "ஐயையோ, வேளுங்க! நாணம் அழகிட்டது. "படத்தை வீட்டிலே எல்லாரும் பார்ப்பாங்களே! முதல்லே சண்பகம் என்ன சொல்லும் ???